Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் அணுகுண்டு முயற்சியில் ஈரான்? டிரம்பின் மிரட்டலுக்கு நடுவே தீவிரமான பணி.. வெளியான போட்டோ

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து ஈரானை மிரட்டி வருகிறது. இந்நிலையில் தான் ஈரானின் அணுசக்தி நிலையங்களில் வழக்கத்துக்கு மாறாக பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவு வாயில்கள்மூடப்பட்டு பாதைகள் தடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இவ்வளவு நாள் சும்மா இருந்த டிரம்ப் அணுஆயுதம் தயாரிக்கமாட்டோம் என்று ஈரான், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய மீண்டும் மிரட்ட தொடங்கி உள்ளார். இதனால் ஈரான் அணுஆயுதம் தயாரிப்பை தீவிரப்படுத்தி உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரானில் பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் ஆதரவு கொடுத்துள்ளன. இந்த 2 நாடுகளும் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு பகையாளியாக உள்ளன. அமெரிக்கா தற்போது ஈரானை சுற்றி போர் விமானங்கள், போர் கப்பல்களை குவித்துள்ளது.

iran nuclear weapons donald trump

இதனால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை தொடர்ந்து மிரட்டி வருகிறார். கடந்த ஆண்டு நடத்திய தாக்குதலை விட மோசமான தாக்குதலை ஈரான் சந்திக்க நேரிடும் என்று மிரட்டி வருகிறார்.

ஈரான் அசாதாரண சூழல்

இந்நிலையில் தான் தற்போது ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களை சுற்றி் அசாதாராணமான சூழல் நிலவி வருகிறது. அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணுசக்தி நிலையங்களுக்கு செல்லும் நுழைவு வாயில்கள், பாதைகள் மூடப்பட்டுள்ளன. அமெரிக்கா தாக்கதல் நடத்தலாம்என்ற அச்சுறுத்தலுக்கு நடுவே அணுசக்தி நிலையங்களில் சில முக்கியமான வேலைகள் நடப்பதாக கூறப்படுகிறது.

உறுதி செய்த செயற்கைகோள் போட்டோ

இந்த வேலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் இதனை உறுதி செய்துள்ளன. ஈரானின் இஸ்ஃபஹான் அணுசக்தி நிலையத்தில் புதிய பணிகள் நடப்பதை அந்த செயற்கைகோள்படம் பிடித்துள்ளது. இந்த அணுசக்தி நிலையம் கடந்த ஆண்டு அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பெரியளவில் சேதமடைந்த நிலையில் அங்கு ரகசியமாக பணிகள் நடந்து வருகிறது.

அணுகுண்டு தயாரிப்பா?

தற்போது சுரங்கப்பாதைகள் உறுதியான சிமெண்ட்டால் வலுப்படுத்தப்பட்டுள்ளன. எத்தகைய தாக்குதல்களையும் தாங்கும் வகையில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த அணுசக்தி நிலையத்தை சுற்றி பல அடுக்குகளாக பாதுகாப்பு உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் செயற்கைகோள் படங்களின் அடிப்படையில் centrifuge machines உள்ள இடங்களுக்கு மேலே பணிகள் நடப்பதை உறுதி செய்துள்ளது.

இந்த Centrifuge Machinesகள் தான் அணுஆயுதம் தயாரிப்புக்கான யுரேனியத்தை செறிவூட்ட பயன்படுத்தப்படுகிறது. இதனால் மீண்டும் ஈரான் அணுஆயுதம் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதா? அல்லது சேதமடைந்த அணுசக்தி மையத்தை புனரமைப்பு செய்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

408 கிலோ யுரேனியம்

இருப்பினும் Institute for Science and International Security அளித்த தகவலின்படி, ‛‛ஈரான் 408 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் வைத்துள்ளது. இந்த யுரேனியம் 60 சதவீதத்துக்கு மேலாக செறிவூட்டப்பட்டுள்ளது. இதுதான் அந்த நாட்டின் அணுஆயுதம் தயாரிப்புக்கு மிகவும் முக்கியம்.

அமெரிக்காவின் அச்சுறுத்தல் காரணமாக அந்த 408 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதுதான் தற்போதை நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக இருக்கலாம்'' என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல் கடும் எதிர்ப்பு

ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதற்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்களில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதில் நடான்ஸ், ஃபோர்டோவ் மற்றும் இஸ்ஃபஹான் அணுசக்தி நிலையங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன.

இந்த தாக்குதலுக்கு முன்பாக ஈரான் செறிவூட்டப்பட்ட 408 கிலோ யுரேனியத்தை பத்திரப்படுத்தி வைத்ததாக தகவல்கள் வெளியாகின. தற்போது அந்த யுரேனியத்தை வைத்து தான் ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதற்கான முன்முயற்சியை மீண்டும் தீவிரமாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒப்பந்தத்துக்கு அழைக்கும் டிரம்ப்

மேலும் அமெரிக்கா தொடர்ந்து ஈரானிடம் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் பலன் அளிக்கவில்லை. மேலும் இதுவரை டொனால்ட் டிரம்ப் ஈரானில் நடக்கும் உள்நாட்டு மக்கள் பிரச்சனையை மையப்படுத்தி மிரட்டல் விடுத்து வந்தார்.

ஆனால் 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஈரான் அணுஆயுதம் தயாரிக்கமாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டினார். சமீபகாலமாக இந்த அணுசக்தி திட்ட ஒப்பந்தம் பற்றி டிரம்ப் பேசாமல் இருந்தது. இப்போது மீண்டும் அதுபற்றி பேசி மிரட்டலை விடுத்துள்ளார்.

ட்ரம்ப் வெளியிட்ட மிரட்டல்

இதுபற்றி டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தில் கூறியுள்ளதாவது: ‛‛நேரம் போய் கொண்டிருக்கிறது. இதனால் ஈரான் விரைவில் பேச்சுவார்த்தை முன்வந்து அனைவருக்கும் நன்மை ஏற்படும் வகையில் நியாயமான மற்றும் சமமான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன். ஈரான் அணுஆயுதம் வைத்திருக்க கூடாது. நேரம் விரைவாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் ஒரு பிரமாண்டமான கடற்படை ஈரான் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

மோசமான தாக்குதல்

வெனிசுலாவின் நிகோலஸ் மதுரோவை கைது செய்ய அனுப்பிய கடற்படையை விட தற்போது ஈரானை நோக்கி சென்றுள்ள கடற்படை மிகவும் பெரியது. அதோடு தயார் நிலையில் உள்ளது. ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படாத பட்சத்தில் அதன் அணுசக்தி தளங்கள் மீது கடந்த 2025 ஜூன் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலை விட மிக மோசமான தாக்குதலுக்கு உள்ளாகலாம்'' என்று மிரட்டினார்.

டிரம்பின் இந்த திடீர் மிரட்டலுக்கும், ஈரானில் அணுசக்தி மையத்தில் நடக்கும் பணிக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. இதனால் ஈரான் அணுஆயுதம் தயாரிப்பை மீண்டும் ரகசியமாக மேற்கொள்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+