காலைநிலை மாற்றத்திற்கு எதிராக போராடுவதில் தலைவனாகவே சவுதி மாறிடுச்சு! என்னென்ன முயற்சி எடுத்திருக்கு பாருங்க!
துபாய் எக்ஸ்போ சிட்டியில் ஐநாவின் 28வது 'காலநிலை மாற்றம்' குறித்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் வாயிலாக சவுதி அரேபியா காலநிலை மாற்றத்திற்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாடு மற்றும் அர்ப்பணிப்புகள் ஆகியவற்றை மீண்டும் ஒருமுறை மிகவும் உறுதிப்படுத்தியது.
இந்த தளங்கள் சவூதி அரேபியாவை அதன் முன்னோக்கிய காலநிலை முன்முயற்சிகளை முன்வைக்கவும் மற்றும் காலநிலை மாற்றத்தின் அழுத்தமான பிரச்சினை பற்றிய முக்கிய விவாதங்களில் பங்கேற்கவும் அனுமதித்தன.

டைனமிக் பட்டறைகள் மற்றும் நிபுணர்களின் விளக்கக்காட்சிகள்:
ப்ளூ ஸோன் பெவிலியன், என்கிற பெயரில் 24க்கு குறையாமல் பட்டறைகள் நிகழ்த்தப்பட்டன. அது கருத்தரங்கள் நடத்தப்பட்டன. பரந்த பார்வையாளர்களை இந்த பட்டறைகள் ஈர்த்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பட்டறைகளில் சவுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சர்வதேசப் பின்னணியைச் சேர்ந்தவர்களும் கலந்துக் கொண்டனர்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். காலநிலை மாற்றத்திற்கு எதிரான சவுதியின் இந்த துடிப்பான ஈடுபாடு, கூட்டாண்மைகளை மிகப் பெரிய அளவில் ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றது. இதன் அர்ப்பணிப்பு, உலகளாவிய காலநிலை நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அறிவுப் பரிமாற்றத்திற்கு ஒரு சான்றாகும்.
உமிழ்வு குறைப்பு மற்றும் ஆற்றல் மாற்றம் பற்றிய உரையாடல்கள்:
பட்டறையில் நடைபெற்ற உரையாடல்களில் பெரும்பாலானவை எதிர்காலத்தை மாசற்ற சுற்றுச்சூழலைக் கொண்டதாக உருவாக்குவது பற்றியே இருந்தது. மேலும், உமிழ்வைக் குறைப்பதற்கும், ஆற்றல் அமைப்புகளை மாற்றுவதற்கும் தீர்வுகளை ஆராயும் உரையாடல்களே அதிகம் நடைபெற்றது. கூடுதலாக, எனெர்ஜியை டிரான்சிட் செய்வதில் மினரல்களின் பங்களிப்பு, விரைந்து கார்பன் உமிழ்வை குறைப்பது குறித்தும் உரையாடல்கள் இந்த பட்டறைகளில் நிகழ்த்தப்பட்டன.
காலநிலை தலைமைத்துவத்தில் தேசிய மற்றும் பிராந்தியங்களின் முன் முயற்சிகள்:
சிஓபி28 இல் சவுதி அரேபியாவின் பங்கேற்பு அதன் முன்முயற்சிகளைக் காட்டுவதற்கு அப்பாற்பட்டதாக உள்ளது. சொல்லப்போனால், காலநிலை நடவடிக்கையில் உலக நாடுகள் அனைத்திற்கும் தலைவனாக செயல்படுவதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கின்றது. நிலையான சுற்றுலா, நிலச் சீரழிவை எதிர்த்துப் போராடுவதற்கான முறைகள், சுற்றுச்சூழல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் போன்றவற்றை சவுதி பகிர்ந்து கொண்டது. மேலும், இந்த அமர்வுகள் தூய்மையான எரிசக்தி தீர்வுகள் மற்றும் உமிழ்வு குறைப்புகளை முன்னேற்றுவதற்கான சவுதி அரேபியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டியது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications