இஸ்லாமிய மூத்த தலைவர்.. சவுதி அரேபியா கிராண்ட் முஃப்தி செய்க் காலமானார்.. மோடி இரங்கல்

Subscribe to Oneindia Tamil

ரியாத்: சவுதி அரேபியாவின் கிராண்ட் முஃப்தி ஷேக் அப்துல்அஜிஸ் அல்-ஷேக் காலமானார். 82 வயதில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மரணத்தை ராயல்கோட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மரண அறிவிப்பு சவுதி அரேபியா மட்டுமின்றி அரபு நாடுகளை கலங்க வைத்துள்ள நிலையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சவுதி அரேபியாவின் கிராண்ட் முஃப்தி ஷேக் அப்துல்அஜிஸ் அல்-ஷேக்கின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

இந்தியாவுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. இருநாடுகள் இடையே வர்த்தகம் உள்பட பல்வேறு விஷயங்களில் நட்புறவு தொடர்ந்து வருகிறது. இந்தியாவுக்கு, சவுதி அரேபியா தலைவர்களும், சவுதி அரேபியாவுக்கு இந்திய தலைவர்கள் அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

saudi arabia grand mufti narendra modi

சவுதி அரேபியாவின் கிராண்ட் முஃப்தி ஷேக் அப்துல்அஜிஸ் பின் அப்துல்லா பின் ஷேக் பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 1999ம் ஆண்டு முதல் இந்த பொறுப்பை வகித்து வந்தார். இந்நிலையில் தான் கிராண்ட் முஃப்தி ஷேக் அப்துல்அஜிஸ் பின் அப்துல்லா பின் ஷேக்கின் உயிர் நேற்று பிரிந்தது. அவருக்கு வயது 84. அவரது மரணத்தை ராயல் கோர்ட் அறிவித்தது.

தற்போது காலமாகி உள்ள முஃப்தி ஷேக் அப்துல்அஜிஸ் பின் அப்துல்லா பின் ஷேக் சவுதி அரேபியாவின் செல்வாக்கு மிக்க மத தலைவராக வலம் வந்தவர். இவரது இறுதி சடங்குகள் ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லா மசூதியில் இன்று நடைபெற உள்ளது. இந்த மசூதி சவுதி அரேபியாவில் மிகவும் பெயர் பெற்ற இடமாகும். பல்வேறு அரசு இறுதிசடங்குகள் இங்கு வைத்து தான் நடத்தப்பட்டு வருகிறது

தற்போது காலமாகி உள்ள கிராண்ட் முஃப்தி ஷேக் அப்துல்அஜிஸ் பின் அப்துல்லா பின் ஷேக் கடந்த 1940ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி மெக்காவில் பிறந்தார். கடந்த 1999ம் ஆண்டில் செய்க் அப்துல் அஜிஜ் பின் பாஸ் என்பவருக்கு பிறகு கிராண்ட் முஃப்தியாக சவுதி அரேபியாவின் மன்னரால் நியமிக்கப்பட்டார். சவுதி அரேபியாவின் மத சொற்பொழிவு ஆற்றி வந்தார். இஸ்லாமி நீதித்துறை கட்டமைப்பிலும் பெரும் பங்கு வகித்தார்.

ஷரியா சட்டம் மற்றும் ஃபத்வாக்களை பிறப்பித்ததில் முக்கிய பங்காற்றி வந்தார். இஸ்லாமியர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி வந்தார். இஸ்லாமிய பிரிவினர் இடையே நிலவும் பிளவுகளை நீக்க வேண்டும் என்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். அதேவேளையில் இஸ்லாமிய மரபு, காலாசாரத்தை பின்பற்றுவதையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இவர் இஸ்லாமிய விவகாரங்களில் புலமை கொண்ட குடும்பமாக கருதப்படும் அல் ஆஷ் ஷேக் குடும்பத்தை சேர்ந்தவர். சிறு வயதிலேயே மத கல்வியை படித்தார். குரானை முழுவதுமாக படித்து இஸ்லாமிய சட்டவியல் படிப்பை முடித்தார். அதன்பிறகு அவர் இமாம் முஹம்மது இப்னு சவுத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். அங்கு அவர் தனது மதம் சார்ந்த போதனைகளை வழங்கினார். சவுதி அரேபியா மட்டுமின்றி அரபு நாடுகளுக்கே புகழ்பெற்ற மததலைவராக விளங்கினார்.

இவரது மறைவுக்கு சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஜ் அல் சவுத் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‛‛சவுதி அரேபியாவின் கிராண்ட் முஃப்தி ஷேக் அப்துல்அஜிஸ் பின் அப்துல்லா பின் ஷேக் முகமது அல் ஷேக் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த துயரமான தருணத்தில் எங்களின் சிந்தனைகளும்,பிரார்த்தனைகளும் சவுதி அரேபியா மற்றும் அதன் மக்களுடன் உள்ளன'' என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+