7 ஏர்போர்ட்டுகளில் விமான சேவையை சஸ்பெண்ட் செய்த சவுதி அரேபியா

Subscribe to Oneindia Tamil

ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள 7 விமான நிலையங்களில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜஸான், அபா, வாதி அல்த்வாசிர், பிஷா, ஷரூரா மற்றும் நஜ்ரான் உள்ளிட்ட 7 இடங்களில் உள்ள விமான நிலையங்களில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவை இன்று காலை முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Saudi Arabia halts flights from airports in south of kingdom

விமான சேவை எதற்காக நிறுத்தப்பட்டுள்ளது என்ற காரணம் தெரிவிக்கப்படவில்லை. சேவை நிறுத்தம் குறித்து பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் விமான நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஏமனில் அட்டகாசம் செய்து வரும் ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி தாக்குதல் நடத்த முடிவு செய்தது. இதையடுத்து கடந்த மாதம் சில நாட்களுக்கு விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சவுதி அரேபியா மற்றும் பிற அரபு நாடுகளைச் சேர்ந்த போர் விமானங்கள் ஏமனில் ஹவ்தி கிளர்ச்சியாளர்களின் இடங்களில் வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+