For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தடுப்பூசி போட்டாச்சா.. அப்ப வீட்டை விட்டு வெளியே வாங்க.. சவுதி அரேபியா போட்ட புது உத்தரவு..!

தடுப்பூசிகள் ஆதாரத்தை காட்டினால்தான் வெளியில் செல்ல துபாய் அரசு அனுமதிக்கிறது

Google Oneindia Tamil News

துபாய்: யாராவது வெளியே போக வேண்டும் என்றால், தடுப்பூசி செலுத்திய ஆதாரத்தை காட்டி விட்டுத்தான் வெளியே போக வேண்டுமாம்.. இப்படி ஒரு அதிரடி உத்தரவை சவுதி அரேபியா அரசு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் தொற்று பரவி வரும் நிலையில், வளைகுடா நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.. நாளுக்கு நாள் தொற்றின் தீவிரம் அதிகமாவதை போலவே, பாதிப்புகளின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே இருக்கிறது.

கொரோனா 2வது அலை ஜூனில் முடிவுக்கு வரும்.. 3வது அலை எப்போது? மத்திய நிபுணர் குழு அறிவிப்பு கொரோனா 2வது அலை ஜூனில் முடிவுக்கு வரும்.. 3வது அலை எப்போது? மத்திய நிபுணர் குழு அறிவிப்பு

சவுதி அரேபியாவில் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்... எனினும், இது எல்லாவற்றிற்கும் ஒரே ஆறுதலாக தடுப்பூசி மட்டுமே அதுவும், ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனகா போன்ற தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கின்றன..

தடுப்பூசி

தடுப்பூசி

சவுதி அரேபியாவிலும் இந்த தடுப்பூசிகள்தான் போடப்பட்டுள்ளன.. அந்த நாட்டில் மொத்தம் 30 மில்லியன் மக்கள் தொகை உள்ளனர்.. இன்றைய தேதிவரை, 11.5 மில்லியன் நபர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.. இதனால் தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது.. அதற்கேற்றபடி, கடந்த ஒரு வருஷமாகவே பொதுப்போக்குவரத்தும் அங்கு முடக்கப்பட்டிருந்தது.. சமீபத்தில்தான், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், சவுதியில் இருந்து வெளியே போகலாம் என்று அனுமதி தரப்பட்டது.

தாக்கம்

தாக்கம்

ஆனால், எதிர்பாராத விதமாக, நேற்று திடீரென தொற்று எண்ணிக்கை எகிறி விட்டது.. 1,200 பேர் பாதிப்பில் உள்ளன.. இத்தனை மாதமாக படாதபாடு பட்டு, தொற்றை கட்டுப்படுத்தி வைத்திருந்த நிலையில், திடீரென நேற்றைய தினம் கொரோனா தாக்கம் தலைதூக்கிவிட்டது.. அதனால்தான், மறுபடியும் ஒரு கட்டுப்பாட்டை சவுதி அரசு பிறப்பித்துள்ளது.

தடுப்பூசி

தடுப்பூசி

வேலைக்கு போகும் அரசு ஊழியர்கள், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும், தாங்கள் தடுப்பூசி செலுத்தி கொண்ட ஆவணத்தை அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டுமாம்.. பணி நிமித்தமாக மட்டுமில்லை, வீட்டை விட்டு வெளியே வந்தாலே இந்த ஆதாரத்தை காட்ட வேண்டுமாம். இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலேயே இந்த ஏற்பாட்டை அந்த அரசு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 அறிவிப்பு

அறிவிப்பு

இதுதொடர்பாக சவுதி பிரஸ் ஏஜென்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.. அதில், "வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பொதுமக்கள் தாங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆதாரத்தை காண்பிக்க வேண்டும். ஆதாரத்தைக் காட்டினால்தான் அரசு அலுவலகங்கள், பேருந்துகள், பள்ளிகள் மற்றும் பிற செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.. இல்லையெனில் அனுமதி கிடையாது" என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, தடுப்பூசி போடாதவர்களும் செலுத்தி கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.. எனவே, சவுதிஅரேபியாவில் விரைவில் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்ற புது நம்பிக்கையும் பிறந்துள்ளது.

English summary
Saudi Arabia says, Residents have to show their vaccination proof
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X