"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்!
சென்னை: ஒரே நாளில் தமிழ்நாட்டில் ஆங்காங்கே தவெகவினரால் அரக்கேறிய குற்றச் செயல்களைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளது திமுக ஐடி விங். மேடையில் தனிமனித ஒழுக்கம் பற்றி ஊருக்குப் பாடம் எடுத்த நீங்கள், முதலில் அதை உங்கள் கட்சியினருக்கு கற்றுக் கொடுத்தீர்களா? என முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளது திமுக.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தவெக கட்சியினர், பல்வேறு விவகாரங்களில் சிக்கி வருகின்றனர். ஆலந்தூரில் தவெக நிர்வாகி, தனியாக வசிக்கும் பெண்ணிடம் அத்துமீற முயன்ற விவகாரம், மதுரையில் அரசு பேருந்து ஓட்டுநரை தவெக நிர்வாகி பட்டாக் கத்தியால் வெட்டிய விவகாரம் ஆகியவை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மேலும், சேலம் மாவட்டம் வீரபாண்டி பகுதியில் தவெக நிர்வாகி மணிகண்டன் என்பவர், பெண்களுக்கு உதவுவது போல நாடகமாடி, அவர்களுடன் பழகி, வீடியோ எடுத்து, மிரட்டி வருவதாகவும், 50க்கும் மேற்பட்ட பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி வருவதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் இந்தச் சம்பவங்களைக் குறிப்பிட்டு திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம், சீரழிக்கும் தவெக பொறுக்கிகள் மறுபக்கம்! உங்க கட்சிப் பொறுக்கிகள் ஒரே நாளில் செய்துள்ள இந்த 'ஹாட்ரிக்' கிரிமினல் சாதனையைப் பார்த்து மெச்சிப் போய் மௌனம் ஆகிட்டீங்களா CM சார்?
நீங்கள் ஒரு மங்குனி முதல்வர் என்று நன்றாகத் தெரிந்துவிட்ட காரணத்தால் தான், உங்களையோ, உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையையோ பார்த்து இந்தப் பொறுக்கிகளுக்கு துளியும் பயமில்லை!
மேடையில் தனிமனித ஒழுக்கம் பற்றி ஊருக்குப் பாடம் எடுத்த நீங்கள், முதலில் அதை உங்கள் கட்சியினருக்கு கற்றுக் கொடுத்தீர்களா?
ஒருவேளை அவர்களைக் கண்டிக்கப் போய், "எங்க தலைவரையும், அவர் படங்களையும் பார்த்துத் தான் நாங்க இப்படி ஆனோம். முதலில் தனிமனித ஒழுக்கம் என்றால் என்னவென்று எங்கள் தலைவரைத் தெரிந்து கொள்ள சொல்லுங்கள்" என்று அந்தப் பொறுக்கிகள் உங்களை நோக்கியே கை நீட்டினால், என்ன செய்வீர்கள் CM சார்?" எனக் காட்டமாக விமர்சிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications