டிரம்பை கைவிடும் இளவரசர் பின் சல்மான்? சவுதி நிலைப்பாட்டால் ஆடிப்போன அமெரிக்கா! இதை எதிர்பார்க்கல

Subscribe to Oneindia Tamil

சவுதி: அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்த பிறகு மத்திய கிழக்கில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று பலரும் நம்பினர். சவுதி அரேபியாவுடன் டிரம்பிற்கு நல்லுறவு இருக்கும் சூழலில், குறைந்தது சவுதி- இஸ்ரேல் இடையேயான பிரச்சினைகளாவது முடிவுக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது அனைவருக்கும் அதிர்ச்சி தரும் கருத்தைச் சவுதி கூறியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

டிரம்ப் வருகைக்குப் பிறகு இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளிடையேயான பதற்றம் குறையும் என்றும் குறிப்பாகச் சவுதி உடன் ராஜதந்திர தொடர்பும் கூட ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

saudi arabia middle east donald trump

இருப்பினும், இந்த விவகாரத்தில் மிகப் பெரிய ட்விஸ்ட் நடந்துள்ளது. இதற்கு என்ன காரணம்.. டிரம்ப்பிற்கு சவுதி அரேபியா அனுப்பிய மெசேஜ் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

மத்திய கிழக்கு விவகாரம்:

அதாவது மத்திய கிழக்கில் இஸ்ரேல்- காசா சுற்றி உள்ள பிரச்சினை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. காசா பகுதியில் வாழும் மக்கள் தனியாக தங்களுக்குப் பாலஸ்தீனம் என்ற நாடு வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு மத்திய கிழக்கில் உள்ள இதர இஸ்லாமிய நாடுகளும் ஆதரவளித்து வருகிறது. இருப்பினும், இஸ்ரேல் இதை ஏற்பதாக இல்லை.

இதனால் எந்தவொரு அரபு நாடு உடனும் இஸ்ரேலுக்கும் ராஜதந்திர ரீதியான உறவு இருப்பதில்ல. இதற்கிடையே அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்த பிறகு, நிலைமை மாறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் அதிபர் டிரம்பிற்கும் இடையே நல்லுறவு உள்ள சூழலில், அதைப் பயன்படுத்தி இஸ்ரேல்- சவுதி இடையேயான உறவு சீராகும் எனச் சொல்லப்பட்டது.

சவுதி திட்டவட்டம்:

இருப்பினும், இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள சவுதி அரசு, 1967ஆம் ஆண்டு இருந்த எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு பாலஸ்தீன அரசை உருவாக்க வேண்டும் என்றும் அதுபோல பாலஸ்தீனத்தை உருவாக்கும் வரை இஸ்ரேல் உடன் எந்தவொரு ராஜதந்திர உறவுகளையும் வைத்திருக்க மாட்டோம் என்பதைச் சவுதி அரேபியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

டிரம்பிற்கு ஷாக்:

சமீபத்தில் தான் அமெரிக்க அதிபரான டிரம்ப், சவுதிக்கு பாலஸ்தீன நாட்டை உருவாக்க வேண்டும் என்பதில் முன்னுரிமை இல்லை என்று கூறியிருந்தார். ஆனால், அதற்கு நேர்மாறான கருத்தை இப்போது சவுதி அரேபியா திட்டவட்டமாகக் கூறி இருக்கிறது. அதாவது பாலஸ்தீன விவகாரத்தில் டிரம்பை இளவரசர் பின் சல்மான் கைவிட்டுவிட்டார் என்றே சொல்லலாம்.

அதில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், சவுதியின் நிலைப்பாட்டைத் திட்டவட்டமாக விளக்கியுள்ளார். மேலும், பாலஸ்தீனியர்களை அவர்களது நிலத்தில் இருந்து வெளியேற்றும் எல்லா விதமான முயற்சிகளையும் சவூதி அரேபியா எதிர்க்கும் என்றும் இந்த விவகாரத்தில் சமரசத்திற்கு வாய்ப்பில்லை என்றும் சவுதி தெரிவித்துள்ளது.

முகமது பின் சல்மான்:

இதுவரை பாலஸ்தீனத்தை எந்தவொரு முக்கிய சர்வதேச அமைப்பும் உலக நாடுகளும் அங்கீகரிக்கவில்லை. எனவே, இதற்கான நடைமுறையை விரிவுபடுத்துமாறு சவுதி அரேபியா உலக நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. பாலஸ்தீன விவகாரத்தில் முகமது பின் சல்மானின் நிலைப்பாடு இதுதான் என்பதை அந்நாட்டு அரசு அமெரிக்காவிடமும் தெரிவித்துவிட்டதாகவே தெரிகிறது.

முன்னதாக காசா பிரச்சினை தொடர்பாக டிரம்ப் ஒரு புதிய தீர்வை முன்வைத்திருந்தார். அதாவது பாலஸ்தீனர்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேறினால்.. அமெரிக்கா அதை வாங்கி டெலவப் செய்யும் எனக் கூறியிருந்தார். இருப்பினும், சவுதி உள்ளிட்ட அனைத்து அரபு நாடுகளுமே டிரம்பின் இந்த அறிவிப்பை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+