சவுதியில் நிபந்தனைகளுடன் பெண்கள் கார் ஓட்ட அனுமதியா?.. புரளி என்கிறது அரசு
ரியாத்: சவுதி அரேபியாவில் நிபந்தனைகளுடன் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவலை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.
இஸ்லாமிய சட்டம் கடுமையாகப் பின்பற்றப்படும் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. இங்கு பெண்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகள் உள்ளன. கார் ஓட்டக் கூட அனுமதி கிடையாது. இதனை எதிர்த்து பெண்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், பெண்களின் கோரிக்கையை ஏற்று நிபந்தனைகளுடன் அவர்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பதாக நேற்று ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், அத்தகவலை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.
30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே கார் ஓட்டலாம், அதுவும் அவர்கள் இரவு 8 மணி வரை மட்டுமே கார் ஓட்டலாம் என்றும், கார் ஓட்டும் போது பெண்கள் ‘மேக்-அப்' செய்து கொள்ள கூடாது என்று அரசு அனுமதித்திருப்பதாக முன்பு செய்தி வெளியானது.
அதேபோல், கார் ஓட்டும் பெண்கள் தங்களது தந்தை, கணவர், சகோதரர் அல்லது மகன் என ஆண் உறவினர்களின் அனுமதி பெற வேண்டும் என்றும் அந்த செய்தி கூறியது.
இத்தகைய நிபந்தனைகளின் பேரில் பெண்கள் கார் ஓட்ட சவுதி அரேபிய மன்னரின் ஆலோசனைக் கவுன்சில் பரிந்துரை செய்திருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவித்தன.
ஆனால், ஊடகங்களில் வெளியான இத்தகவலை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. இது கற்பனையான, புனை செய்தி. இதில் உண்மை இல்லை. சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டுள்ள தடை நீடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications