மெக்கா மசூதியை தகர்க்கும் பயங்கர சதி முறியடிப்பு.. தற்கொலைப் படை தீவிரவாதி வெடித்துச் சிதறல்!
ரியாத்: முஸ்லீம்களின் புனித் தலமான மெக்காவில் உள்ள பெரிய மசூதியை தகர்க்கும் நோக்கத்துடன் பதுங்கியிருந்த தற்கொலைப் படைத் தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். இதையடுத்து அந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
உரிய நேரத்தில் தீவிரவாதி கண்டுபிடிக்கப்பட்டதால் மிகப் பெரிய தாக்குதலை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர். மெக்காவில் 2 தாக்குதல்களுக்கும், ஜெட்டாவில் ஒரு தாக்குதலுக்கும் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 3 தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டதாக சவூதி அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 5 பாதுகாப்புப் படையினர் உள்பட 11 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சவூதி உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மன்சூர் அல் துர்க்கி கூறுகையில், மெக்காவில் 2 இடங்களிலும், ஜெட்டாவில் ஒரு இடத்திலும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
மெக்காவில் உள்ள அஸ்ஸிலா என்ற பகுதியில் முதல் சதித் திடடம் முறியடிக்கப்பட்டது. 2வது சதித் திட்டம் அய்யாத் அல் மசாபியில் முறியடிக்கப்பட்டது. ஒரு தற்கொலைப்ப படைத் தீவிரவாதி மெக்காவில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்தார். அவரைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் முயற்சித்தபோது அவர் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். பின்னர் தனது வெடிகுண்டை வெடிக்கச் செய்தார் என்றார்.
ரம்ஜான் சமயத்தில் இதுபோல நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications