58 கோடி வருடம் முன் வாழ்ந்த விசித்திர உயிரினம்.. டிக்கின்சோனியாவின் கால்தடம் கண்டுபிடிப்பு!
58 கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த விசித்திரமான உயிரினம் ஒன்றின் கால் தடம் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ: 58 கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த விசித்திரமான உயிரினம் ஒன்றின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. உலகம் தொடங்கியதில் இருந்து பல விதமான உயிர்கள் தோன்றி மறைத்து இருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான உயிரினம் உலகை ஆண்டு இருக்கிறது.
தற்போது மனித இனம் இந்த உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் 58 கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த உயிரினம் ஒன்றின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் பெயர் டிக்கின்சோனியா ஆகும்.

எங்கு கண்டுபுடித்தனர்
ரஷ்யாவில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. ரஷ்யாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள வெள்ளை கடல் பகுதியில் இந்த டிக்கின்சோனியா கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகளில் இந்த டிக்கின்சோனியா உயிரினத்தின் தடங்கள் ஏற்கனவே இருந்தாலும், ரஷ்யாவில் இருக்கும் இதுதான் மிகவும் பழமையானது.

எப்படி இருக்கிறது
இது பெரிய கால் தடம் போல இருக்கும். ஆனால் சரியாக சொல்ல வேண்டும் என்றால் இது அந்த டிக்கின்சோனியா உயிரினத்தின் மொத்த உடல்தடம். ஆம், யானையின் காலை போலத்தான் இதன் உடல் தடம் இருக்கும். இது தரையில் இருக்கும் போது ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இந்த தடம் ஏற்பட்டு இருக்கிறது. இது சுமார் 1.4 மீட்டர் நீளம் உள்ளது. இதன் உடல் முழுக்க கோடு கோடுகளாக இருக்கிறது.

என்ன வருஷம்
இது வாழ்ந்த காலம் 58 கோடி வருடங்களுக்கு முன்பு என்று கூறப்படுகிறது. முதலில் இது 30 கோடி வருடம் முன் வாழ்ந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் தடயங்கள் அதைவிட பழமையானதாக உள்ளது. இது பெரிய ஆச்சர்யத்தை ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.

ஆராய்ச்சி செய்ய வேண்டும்
இந்த டிக்கின்சோனியாவை ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள். இதில் சிறிய சிறிய திசுக்கள் இப்போதும் இருப்பதாக கூறியுள்ளனர். ஆம் அந்த தடத்தில் இறந்த அந்த டிக்கின்சோனியா உயிரினத்தின் திசுக்கள் சில இருக்கிறதாம். இதை வைத்து பல புதிய ஆராய்ச்சிகளை செய்ய இருக்கிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications