பீட்சாவை 3 நாள் விடாம சாப்பிட்டா நீரிழிவு நோய்க்கு நாங்க கேரண்டி - அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்
நியூயார்க்: உடலுக்கு கேடு விளைவிக்கும் வகையிலான ஜங்க் புட்களான பீட்சா, பர்கர் போன்றவற்றை உண்பதால் சர்க்கை வியாதி உண்டாகும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் உணவுப் பழக்கத்திலும் ஒன்றிவிட்ட பர்கர், பீட்சாக்களில் மாவில் கலக்கும் அதீத சர்க்கரை அதனுடன் குடிக்கும் குளிர்பானங்களில் இருக்கும் சர்க்கரை என இவற்றை தொடர்ந்து உட்கொண்டாலே மூன்றே நாட்களில் நீரிழிவு நோய் வரும் ஆபத்து உள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பிலிடெல்பியா நகரில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அமெரிக்க உணவுப் பழக்கங்களை மூன்றே நாட்களில் தொடர்ந்து கடைபிடித்தாலே நீரிழிவு நோய் வரும் என தெரியவந்துள்ளது.

6 ஆண்களிடம் சோதனை:
இந்த ஆய்வுக்காக சிறப்பான உடல்நலம் கொண்ட 6 ஆண்களை ஒரு வாரத்துக்கு, 50 சதவிகிதம் கார்போஹைட்ரேட், 35 சதவிகிதம் கொழுப்பு மற்றும் 15 சதவிகிதம் புரதம் போன்றவற்றுடன் சேர்ந்த உணவு வகைகளை, ஒரு நாளில் 6000 கலோரிகளுக்கு கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

உடற்பயிற்சி கூடாது:
இவர்களை உடற்பயிற்சி ஏதும் மேற்கொள்ளக் கூடாது எனவும் கூறியிருந்தனர். இந்த ஆண்கள் குறிப்பிடப்பட்ட அளவு கலோரிகள் கொண்ட உணவுக்காக அமெரிக்க உணவுகளான பீட்சா, பர்கர் போன்றவற்றை அன்றாட உணவாக எடுத்துக்கொண்டனர்.

அதிகரிக்கும் உடல் எடை:
இந்த காலகட்டத்தில் இன்சுலின் எதிர்ப்பு ஏற்பட்டதால் உடலின் குளுகோஸை செல்கள் உறிஞ்சாமல், இவை நேரடியாக ரத்தத்தில் கலப்பது உடல் எடை அதிகரிக்க காரணமாக அமைந்தது. இத்தனை வேகமாக நீரிழிவு நோய் ஏற்பட்டது இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் தந்தது. இந்த மாற்றம் மூன்றே நாட்களில் ஏற்பட்டது.

குணமாக்கவும் வழி இருக்கும்:
இந்த முடிவைக் கொண்டு வேகமாக நீரிழிவு நோய் ஏற்பட வழியிருந்தால், அதே வேகத்தில் அதை குணமாக்கவும் வாய்ப்பிருக்கும் என்ற நம்பிக்கையுடன் அதற்கான ஆய்வில் ஈடுபட உள்ளதாக இதன் ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications