இந்தோனேசியாவில் மிக மோசமான விபத்து? மாயமான விமானத்தை தேடும் பணிகள் 2வது நாளாக தீவிரம்! முக்கிய தகவல்
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 10 பயணிகளுடன் திடீரென விமானம் ஒன்று மாயமானது. அந்த விமானம் இப்போது எங்கு இருக்கிறது என்றே தெரியாத நிலையில், அதைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. பல மணி நேரம் ஆகியும் விமானத்தைக் கண்டுபிடிக்க முடியாததால் அது விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பொதுவாகவே மற்ற போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் மிகவும் பாதுகாப்பான ஒரு போக்குவரத்து முறையாகவே விமானங்கள் இருக்கிறது. இதன் காரணமாகவே ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த விபத்துகளே விமானங்களில் ஏற்படுகிறது. இருப்பினும், விபத்துகள் ஏற்படும்போது அது மிக மோசமான அழிவை ஏற்படுத்துவதால் அது உலகளவில் பேசப்படும் சம்பவங்களாக மாறிவிடுகிறது.

இந்தோனேஷியா விபத்து
அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது மீண்டும் நடந்துள்ளது. இந்தோனேஷியாவில் மூன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஏழு விமானப் பணியாளர்களுடன் சென்ற விமானம் நேற்றைய தினம் மாயமானது. நேற்று சனிக்கிழமை அன்று விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து, இந்தத் தேடுதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
என்ன நடந்தது
யோக்யகர்த்தாவில் இருந்து சுலாவேசி தீவில் உள்ள மகசார் நகரை நோக்கி இந்தோனேஷியா ஏர் டிரான்ஸ்போர்ட் டர்போப்ராப் ரக விமானம் சென்றுள்ளது. அந்நாட்டின் கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகத்தின் மூன்று ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள வளங்களை வான்வழியாகக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதை அமைச்சர் சக்தி வாக்யு ட்ரெங்கொனோ உறுதிப்படுத்தினார்.
தேடுதல் பணி தீவிரம்
ஏழு விமானப் பணியாளர்களும் இதில் பயணித்தனர். இந்தச் சூழலில் தான் சனிக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தைத் தேடும் பணிகள் தொடங்கியது. மகசாரை ஒட்டியுள்ள மாரோஸ் ரீஜென்சி மலைப்பகுதியில் தேடுதல் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தேடல் மற்றும் மீட்புப் படையின் தலைவர் முகமது ஆரிப் அன்வர் தெரிவித்தார்.
விமானப்படை, காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து விமானத்தைத் தேடும் பணிகளில் இறங்கியுள்ளனர்.. இதில் ஹெலிகாப்டர், ட்ரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், பல மணி நேரத் தேடுதலுக்குப் பிறகும் விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல விமான நிறுவனமான ஏடிஆர் தயாரித்த விமானமே மாயமாகி இருக்கிறது. இது குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும், விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் அந்த நிறுவனம் கூறியது.
இந்தோனேசியா
தெற்காசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியா பல ஆயிரம் தீவுகளைக் கொண்டது. எனவே, அங்கு விமானப் போக்குவரத்து அவசியமான ஒன்றாக இருக்கிறது. இருப்பினும், அங்கு மிக மோசமான விமான பாதுகாப்பே இருக்கிறது. அண்மைக் காலங்களில் பாதுகாப்பு குறைபாடுகளால் அங்கு பல மோசமான விமான விபத்துகள் நடந்துள்ளன.
கடந்த ஆண்டு செப்டம்பரில், தென் கலிமந்தன் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் ஆறு பயணிகள் மற்றும் இரண்டு விமானப் பணியாளர்கள் என 8 பேர் உயிரிழந்தனர். அடுத்த இரண்டு வாரங்களுக்குள், பப்புவாவின் இலகா மாவட்டத்தின் நடந்த இன்னொரு ஹெலிகாப்டர் விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சூழலில் தான் இப்போது அரசு அதிகாரிகள் சென்ற விமானமும் மாயமாகி இருக்கிறது. விமானத்திற்கு என்னவானது என உறுதியாகத் தெரியாததால் குழப்பம் தொடர்கிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications