யூத வழிபாட்டு தலத்திற்கு.. அடியில் இருந்த சுரங்கம்.. உள்ளே "கறையோடு" மெத்தைகள்! உள்ளே நடந்தது என்ன?
நியூயார்க்: நியூயார்க்கில் உள்ள ஒரு யூத ஜெப ஆலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கம் அங்கிருந்த மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்கே சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுரங்கப்பாதையை நியூயார்க் நிர்வாகம் சீல் வைப்பதை ஆர்த்தடாக்ஸ் யூதர்கள் தடுக்க முயன்றபோது அங்கே பெரிய மோதல் வெடித்தது.
இந்த சுரங்கம் ஏன் கட்டப்பட்டது உள்ளே நடந்தது என்ன என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன. அதிலும் உள்ளே இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளன. நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் கிரவுன் ஹைட்ஸில் அமைந்துள்ள சாபாத் லுபாவிட்ச் யூத உலக தலைமையகத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் வைரலானது. அந்த யூதஜெப ஆலயத்தில் இருந்த ஆண்கள் காவல்துறை அதிகாரிகளுடன் எப்படி மோதினார்கள், அவர்களில் சிலர் பின்னர் கைது செய்யப்பட்டது எப்படி என்பது தொடர்பான காட்சிகள் வைரலாகி வருகின்றன.
என்ன நடந்தது?: வாரம் டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை, கட்டிடத்தின் அடித்தளத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் விதமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரகசியமாக இந்த சுரங்க தோண்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சுரங்கப்பாதைகள் ஏன் கட்டப்பட்டன என்பது குறித்து காவல்துறை இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கத்தை வழங்கவில்லை.
அந்த யூத கட்டிடத்தின் பெண்கள் பிரிவு இருக்கும் பகுதிக்கு இந்த சுரங்கம் சென்றுள்ளது. அங்கே பெண்கள் தங்களை கழுவிக்கொள்ளும் பகுதியும் இருந்துள்ளது. உள்ளே இருந்து ரத்த கறை போன்ற கறை படிந்த பெட்கள் கைப்பற்ற சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பெரிய சர்ச்சை: அந்த யூதஜெப ஆலயத்தில் இருந்த ஆண்கள் காவல்துறை அதிகாரிகளுடன் மோதிய நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. உள்ளே சிறுமிகள், குழந்தைகள் உடைகள் கைப்பற்றப்பட்டது அதேபோல் கைக்குழந்தைகள் அமரும் ஷேர்கள் கைப்பற்றப்பட்டதால் உள்ளே வேறு எதாவது நடந்திருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
உள்ளே பாலியல் ரீதியாக ஏதாவது சம்பவங்கள் நடந்து உள்ளதா என்றும் விசாரணைகள் நடந்து வருகின்றன. அங்கே சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுரங்கப்பாதையை நியூயார்க் நிர்வாகம் சீல் வைப்பதைத் ஆர்த்தடாக்ஸ் யூதர்கள் தடுக்க முயன்றபோது அங்கே பெரிய மோதல் வெடித்தது.
கொரோனா சமயம்: கொரோனா சமயத்தில் உள்ளே இவர்கள் தங்கி இருந்தானரா என்றும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவில் இருந்து பாதுகாக்க இவர்கள் இதை பயன்படுத்தினார்களா என்றும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
அங்கே சுரங்கப்பாதைகளை சிமென்ட் லாரி நிரப்ப முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த பலர் பிரதான ஜெப ஆலயத்தின் மரப் பலகைகளை கிழித்து எதிர்ப்பு தெரிவித்தனர். NYPD உடனான மோதல்கள் காரணமாக கிட்டத்தட்ட அங்கே பெரிய கலவரமே வெடித்தது.
உள்ளே இருந்த மரத்தாலான பேனல்களை விரைவாக அகற்றியது. பல போராட்டக்காரர்கள் சுரங்கப்பாதையை விட்டு வெளியேற மறுத்ததால், அவர்கள் அரெஸ்ட் செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது அந்த சுரங்கத்தை மூடும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த சுரங்கம் ஏன் கட்டப்பட்டது உள்ளே நடந்தது என்ன என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன. அதிலும் உள்ளே இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளன
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications