நீங்க தான் சார் ரியல் ஹீரோ.. ஒரே நாளில் இணையத்தில் பிரபலமான காவலர்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த காவலர் ஒருவர் மழையில் நனையாமல் இருக்க நாய்க்கு குடைப்பிடித்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஈடர்பர்க்: ஸ்காட்லாந்து நாட்டில் மழையில் இருந்து நாயை பாதுகாக்க குடை பிடித்தப்படி நின்ற காவலரை ரியல் ஹீரோ என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
காவல்துறை என்றாலே அது ஸ்காட்லாந்து தான். உலகளவில் ஸ்காட்லாந்து போலீசார் புகழ்பெற்று விளங்க அவர்களது துப்பறியும் திறன் மட்டும் காரணம் அல்ல, அவர்களின் மனிதாபிமானமும் தான் முக்கிய காரணம்.

ஸ்காட்லாந்து போலீஸ் மட்டுமல்ல, அந்நாட்டில் காவலர்களாக வேலை பார்க்கும் அனைவருமே மனிதாபிமானம் மிக்கவர்கள் என்பதை நிரூபித்துள்ளது சமூகவலைதளங்களில் வைரலாகி இருக்கும் இந்த புகைப்படம்.
கிளாக்கௌவ் நகரைச் சேர்ந்த டேவிட் செர்ரி என்பவர் தனது நாய் ப்ரெட்டியை அழைத்துக்கொண்டு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றார். கடைக்கு உள்ளே நாயை அழைத்து செல்ல அனுமதி இல்லை என்பதால், அதனை வெளியே இருக்க சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
ப்ரெட்டியும் தனது எஜமான் உத்தரபடி சமத்துபிள்ளையாக சூப்பர் மார்க்கெட் வெளியே உட்கார்ந்திருந்தது. அப்போது அங்கு திடீரென மழை பெய்யத் தொடங்கிவிட்டது. இதனால் அந்த நாய் மழையில் நனைய ஆரம்பித்தது.
இதைப்பார்த்த சூப்பர் மார்க்கெட் காவலர் ஈதன் டியர்மேன், தனது குடையை விரித்து நாய்க்கு மேல் பிடித்தார். இதனால் ப்ரெட்டி மழையில் நனையாமல் தப்பித்தது. ஆனால் அந்த காவலர் தனக்கு குடை பிடிக்காமல் மழையில் நனைந்தபடி நின்றிருந்தார்.
இந்த காட்சியை தூரத்தில் இருந்து புகைப்படம் எடுத்த நெட்டிசன் ஒருவர், அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதோடு காவலர் ஈதன் டியர்மேனின் மனிதாபிமானத்தையும் அவர் பாராட்டி இருந்தார். இதைப்பார்த்த மற்றவர்களும் ஈதனை 'ரியல் ஹீரோ' என பாராட்டித்தள்ளி வருகின்றனர்.
மழையில் நனையாமல் இருக்க நாய்க்கு குடை பிடித்த காவலர் ஈதனின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தை 1.5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். 20,000 பேர் ரீடிவீட் செய்துள்ளனர்.
காவலர் ஈதனுக்கு ப்ரெட்டியின் சார்பாக அதன் முதலாளி டேவிட் செர்ரியும் நன்றி தெரிவித்து டிவீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications