பாரீ்ஸ், மாலி தாக்குதலால் பீதி.. பெய்ஜிங்கில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு
பெய்ஜிங்: பாரீஸ் மற்றும் மாலியில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து சீன அரசு, தனது தலைநகர் பெய்ஜிங்கில் பாதுகாப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
மேலும் தலைநகரில் தீவிரவாதத் தடுப்புப் பிரிவுகள் பல இடங்களில் குவிக்கப்பட்டுள்ளன. ராணுவம் மற்றும் போலீஸ் படையினரும் அதிகரிக்கப்பட்டுள்ளனர். எந்த வகையான தாக்குதல் தொடுக்கப்பட்டாலும் உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்லும் வகையில் படையினர் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தீவிர வாகனக் கண்காணிப்பு, பார்சல்கள் உள்ளிட்டவற்றை கண்காணிப்பது உள்ளிட்டை முடுக்க விடப்பட்டுள்ளன. பாரீஸில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து மாலியில் ஹோட்டலில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தற்போது சீனாவிலும் அச்சம் எழுந்துள்ளது.
நவம்பர் 15ம் தேதி முதலே சீன அரசு பாதுகாப்பை அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. தற்போது பெய்ஜிங் நகரம் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மாலி ஹோட்டல் சம்பவத்தில் 3 சீனர்களும் கொல்லப்பட்டுள்ளனர். எனவே சீனாவைக் குறி வைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்தே பெய்ஜிங்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மிகவும் விழிப்புணர்வுடன் பாதுகாப்புப் படையினர் செயல்பட வேண்டும் என்று சீன தேசிய தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவரும், போலீஸ் தலைவருமான குவா செங்குன் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications