ஜானுக்கு பின் ஒரு டீம் உள்ளது.. சென்டினல் தீவில் ஆய்வு செய்ய திட்டம்.. பழங்குடிகள் வாரியம் முடிவு!
சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொலை செய்யப்பட்ட ஜான் ஆலனுக்கு பின் சிலர் இருந்து அவரை தூண்டிவிட்டதாக தகவல்கள் வருகிறது.
Recommended Video

சென்டினல்: சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொலை செய்யப்பட்ட ஜான் ஆலனுக்கு பின் சிலர் இருந்து அவரை தூண்டிவிட்டதாக தகவல்கள் வருகிறது. இதையடுத்து அந்தமான் தீவுகளில் ஆய்வு நடத்த மத்திய அரசின் பழங்குடிகள் வாரியம் முடிவெடுத்து இருக்கிறது.
கடந்த வாரம் 14ம் தேதி அந்தமானில் இருக்கும் மர்ம தீவான சென்டினல் தீவில் ஜான் ஆலன் என்ற அமெரிக்கர் கொலை செய்யப்பட்டார். சென்டினல் தீவு மக்கள் செல்ல தடை செய்யப்பட்ட தீவு ஆகும்.
இங்கு உள்ள சென்டினேலீஸ் மக்களுக்கு வெளியுலக மனிதர்களை பிடிக்காது. இந்த நிலையில்தான் கடந்த வாரம் அந்த தீவிற்கு சென்ற போது ஜான் ஆலன் கொலை செய்யப்பட்டார்.

பின்னணி
இந்த நிலையில் சென்டினல் தீவிற்கு ஜான் செல்லும் போது தனியாகத்தான் சென்றார். ஆனால் அவருக்கு பின் நிறைய பேர் இருக்கிறார்கள். அவருக்கு பின் சிலர் தூண்டுதல் வேலைகளை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தமான் தீவில் அவர் சிலர் அமெரிக்கர்களை சந்தித்ததாகவும், அதன்பின்தான் அவர் சென்டினல் தீவிற்கு செல்ல தீவிரவமாக முயற்சி செய்தார் என்றும் கூறுகிறார்கள்.

யார் இவர்கள்
இவர்கள் ஒருவேளை கிருஸ்துவ மிஷனரியை சேர்ந்தவர்களா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஜானை, சென்டினல் தீவிற்கு செல்லும் முன் 3 மணி நேரத்திற்கு முன் பெண் ஒருவர் வந்து சந்தித்துவிட்டு சென்றதாகவும் தகவல்கள் வருகிறது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

ஆய்வு நடத்த முடிவு
இந்த நிலையில்தான் அந்தமான் தீவுகளில் ஆய்வு நடத்த மத்திய பழங்குடிகள் ஆணையம் முடிவெடுத்து இருக்கிறது. தீவுகளின் நிலை எப்படி இருக்கிறது, அங்கு ஊடுருவல் எப்படி நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக அவர்கள் ஆய்வு நடத்த உள்ளனர். ஆதிவாசிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த ஆய்வை செய்ய உள்ளனர்.

மொத்தம்
மொத்தம் 30 தீவுகள் அந்தமான் கடல் பகுதியில் இப்படி சின்ன சின்னதாக இருக்கிறது. இந்த 30 தீவுகள் உட்பட சென்டினல் தீவிலும் ஆய்வு நடத்த உள்ளனர். ஆனால் அவர்கள் தீவிற்கு செல்வார்களா என்று இன்னும் விளக்கம் அளிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications