"இந்த நாளை நோட்டு பண்ணி வைங்க!" 7 வருடத்துக்கு முன்பே சொன்ன மெஸ்ஸி வெறியர்! அடேங்கப்பா இது எப்படிங்க

Subscribe to Oneindia Tamil

கத்தார்: கால்பந்து உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றுள்ள நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்பே இது குறித்து மெஸ்ஸி ரசிகர் ஒருவர் போட்ட ட்வீட் இப்போது டிரெண்டாகி வருகிறது.

சுமார் ஒரு மாதமாக நடந்து வந்த உலகக் கோப்பை திருவிழா ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இதில் உலகக் கோப்பைக்காக மொத்தம் 32 நாடுகள் மோதின. தொடக்கம் முதலே இதில் பல ட்விஸ்ட்கள் அரங்கேறின.

ஒரு வழியாகப் போட்டிகள் எல்லாம் முடிந்து நேற்றிரவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் தகுதி பெற்றன. நேற்று இந்த இரு அணிகளும் மோதிய விறுவிறுப்பான இறுதிப் போட்டிகள் நடந்தன.

 அனல் பறந்தது

அனல் பறந்தது

இந்த இறுதிப் போட்டியில் தொடக்கம் முதலே அனல் பறந்தது. ஒவ்வொரு நொடியும் அரங்கமே அதிர்ந்தது. இதுதான் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி பங்கேற்கும் கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. இதனால் அர்ஜென்டினா எப்படியாவது போட்டியை வெல்ல வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்பினர். அதேநேரம் 2018இல் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் பட்டத்தைத் தக்க வைக்க வேண்டும் என்று அந்நாட்டின் ரசிகர்கள் விரும்பினர். குறிப்பாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரேன் இறுதிப் போட்டியைப் பார்க்க நேரில் வந்தார்.

 முன்னிலை

முன்னிலை

ஆட்டம் தொடங்கிய உடன் 23வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை மெஸ்ஸி அட்டகாசமான கோலாக மாற்றினார். இதையடுத்து சற்று நேரத்தில், அதாவது 36ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி தனது அசாத்திய திறமையால் பிரான்ஸ் தடுப்பை உடைத்து, பந்தை உள்ளே எடுத்துச் சென்று டி மரியாவிடம் பாஸ் செய்தார். இதை அவர் கோலாக மாற்ற முதல் பாதியில் 2-0 என்று அர்ஜென்டினா முன்னிலை வகித்தது. அர்ஜென்டினா எளிதாக சாம்பியன் ஆகும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், இரண்டாம் பாதியில் கம்பேக் கொடுத்தது பிரான்ஸ். அதுவும் 80ஆவது நிமிடத்திற்கு மேல்.

 கம்பேக்

கம்பேக்

எம்பாப்பே ஒரே ஆளாக பிரான்ஸ் அணியைத் தூக்கி நிறுத்தினார். முதலில் 80ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். அதைத் தொடர்ந்து அடுத்த நிமிடத்திலேயே அர்ஜென்டினா தடுப்பை உடைத்துக் கொண்டு சென்று மற்றொரு கோலை போட்டு போட்டியைச் சமமாக்கினார். இரு தரப்பு சமமான கோலை போட்டிருந்ததால், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதிலும் முதல் இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

 ஷூட் அவுட்

ஷூட் அவுட்

கூடுதல் நேரத்தில் இரண்டாம் பாதியில் 109வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடிக்க அர்ஜென்டினா ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால், சில நிமிடங்களிலேயே மீண்டும் கிடைத்த பெனாட்டி வாய்ப்பை கோலாக்கினார் எம்பாப்பே. இதன் மூலம் இறுதிப் போட்டியில் அவர் ஹாட் டிரிக் கோல் அடித்தார். போட்டி 3-3 எனச் சமனில் முடிந்த நிலையில், பென்லாடி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதல் வாய்ப்பை எம்பாப்பே (பிரான்ஸ்), மெஸ்ஸி (அர்ஜென்டினா) இருவரும் கோல் அடித்தனர். இருப்பினும், இரண்டாவது வாய்ப்பில் பிரான்ஸ் அணியின் கிங்ஸ்லி இரண்டாவது வாய்ப்பை மிஸ் செய்தார். அதில் அர்ஜென்டினா அணியின் பாலோ கோல் அடிக்கவே 2-1 என்ற அர்ஜென்டினா முன்னிலை பெற்றது.

 பழைய ட்வீட்

பழைய ட்வீட்

மூன்றாவது வாய்ப்பையும் பிரான்ஸ் அணி தவறவிட்டது. அப்போது அர்ஜென்டினா அணியின் பரடெஸ் கோல் அடித்தார். 4ஆவது வாய்ப்பில் பிரான்ஸ் கோல் அடித்த போதிலும், அர்ஜென்டினாவும் தனது வாய்ப்பில் கோல் அடித்தது. இதன் மூலம் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா உலகக்கோப்பை வென்று அசத்தியது. சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையை வென்றுள்ளது. இதற்காக மெஸ்ஸி உள்ளிட்ட அர்ஜென்டினா வீரர்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே 7 ஆண்டுகளுக்கு முன்பு மெஸ்ஸி ரசிகர் ஒருவர் பதிவிட்ட ட்வீட் டிரெண்டாகி வருகிறது.

 அன்றே கணித்த மெஸ்ஸி ரசிகர்

அன்றே கணித்த மெஸ்ஸி ரசிகர்

அந்த ரசிகர் தனது ட்விட்டரில், "2022ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி.. 34 வயதில் லியோனல் மெஸ்ஸி உலகக் கோப்பையை வென்று எல்லா காலத்திலும் சிறந்த வீரராக மாறுவார். 7 வருடங்கள் கழித்து இதை வந்து பாருங்கள்" என்று பதிவிட்டிருந்தார். இதை அவர் நேற்றோ போன வாரமோ பதிவிடவில்லை. கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி பதிவிட்டிருந்தார். சுமார் 7ஆண்டுகளுக்கு முன்பே என்ன நடக்கும் என்பதை அவர் துல்லியமாகக் கணித்துள்ளார். அந்த ட்வீட்டை கால்பந்து ரசிகர்கள் இப்போது கால்பந்து ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

 பதறிய ரசிகர்

பதறிய ரசிகர்

இவரது இந்த ட்வீட்டை இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். அதேபோல சுமார் ஒரு லட்சம் பேர் ரீட்வீட் செய்துள்ளனர். முன்னதாக இந்தாண்டு உலகக் கோப்பை தொடங்கும் முன்பே இவரது ட்வீட் டிரெண்டானது இருந்தது. அப்போதே அவர், "இத்தனை பேர் எனது ட்வீட்டை பார்த்துள்ளீர்கள்.. எனக்குச் சற்று பயமாகவே உள்ளது.. இந்தாண்டு என்ன நடக்கப் போகிறதோ" என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+