ஃபேஸ்புக் மூலம் இளம்பெண்களை விபச்சாரத்தில் தள்ளும் கும்பல்கள்: 'திடுக்' ரிப்போர்ட்
லண்டன்:சமூக விரோத கும்பல்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி இளம்பெண்களை ஈர்த்து அவர்களை விபச்சாரத்தில் தள்ளுவதாக யூரோபோல் தெரிவித்துள்ளது.
சமூக விரோத கும்பல்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களை ஈர்த்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக ஐரோப்பா போலீஸ் ஏஜென்சியான யூரோபோலின் தலைவர் ராப் வெய்ன்ரைட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,

வீட்டு வேலை
பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல்கள் அவர்களை ஈர்க்க குழந்தைகளை பார்த்துக் கொள்ள, வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்பது போன்று சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்கிறார்கள்.

விபச்சாரம்
விளம்பரங்களை பார்த்து தொடர்புகொள்ளும் பெண்களை கடத்தி விபச்சாரத்தில் தள்ளிவிடுகிறார்கள். அந்த பெண்கள் தாங்கள் விற்ற விபச்சார விடுதியில் தான் இருக்கிறார்கள் என்பதை வெப்சாட் மற்றும் வெப்கேம்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.

வருமானம்
இப்படி பெண்களை கடத்தி விபச்சாரத்தில் தள்ளுவதன் மூலம் சமூக விரோத கும்பல்களுக்கு ஆண்டுக்கு 150 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைக்கிறது.

எந்தெந்த நாடு
இந்த கும்பல்களிடம் சிக்கிய பெண்கள் ரோமானியா, பல்கேரியா, ஹங்கேரி, இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள். சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் முயற்சியால் தான் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications