நேபாளத்திற்கு எமனாக உள்ள மேலோட்டமான நிலநடுக்கங்கள்
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியிருந்த நிலநடுக்கத்தால் இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது இந்தியாவில் டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டன.

இந்நிலையில் இன்று மதியம் 12.35 மணிக்கு நேபாளத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. எவரெஸ்ட் சிகரம் அருகே உள்ள நம்சே பஜார் நகரில் இருந்து 68 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து டெல்லி, பீகார், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நில அதிர்வு ஏற்பட்டது.
நிலநடுக்கத்தை அடுத்து நேபாள தலைநகர் காத்மாண்டுவில் ஆயிரக்கணக்கானோர் தெருக்களுக்கு ஓடிவந்து அங்கேயே நின்று கொண்டுள்ளனர். மேலும் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுகத்தால் விரிசல் அடைந்த கட்டிடங்கள் இன்றைய நிலநடுக்கத்தால் இடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகியுள்ளனர்.
நிலநடுக்கம் ஆழத்தில் ஏற்பட்டால் நில அதிர்வுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். ஆனால் நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆழத்தில் ஏற்படாததால் தான் அடிக்கடி ஆப்டர்ஷாக் எனப்படும் நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன.
இன்றைய நிலநடுக்கம் வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால் இது அபாயகரமானது என்று கூறப்படுகிறது. நிலநடுக்கம் மேலோட்டமாக ஏற்படுவது ஆபத்தானது என்று நிபுணர்கள் கடந்த மாதமே தெரிவித்த நிலையில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications