மாசடைந்த காற்று... பள்ளிகள் மூடல் போக்குவரத்து தேக்கம்: வீட்டிற்குள் முடங்கிய சீன மக்கள்
ஷாங்காய்: காற்று மாடுபாட்டின் காரணமாக புகைமூட்டம் ஏற்பட்டதால் சீனர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.
பெருகிவரும் தொழிற்சாலைகள், வாகனங்களின் புகை வெளியேற்றம் மற்றும் வானிலை மாற்றங்களின் காரணமாக சீனாவில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதாக எழுந்த எச்சரிக்கைகளின் அடிப்படையில் கடந்த ஏப்ரலில் புதிய சுகாதார எச்சரிக்கை அமைப்புகள் செயல்படுத்தப்பட்டன.
எனினும், தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் ஷாங்காய் நகரமே பனிமூட்டமாகக் காணப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.

காற்று மாசுபாடு...
கடந்தாண்டு சீனத் தலைநகர் பீஜிங்கில் அடிக்கடி காற்று மாசுபாடுப் பிரச்சினைத் தலைக்காட்டியது. ஆயினும் கடற்கரை நகரமான ஷாங்காயில் இதுநாள்வரை காற்று மாசுபாடு லேசான அளவில்தான் இருந்து வந்தது.

இயல்வு வாழ்க்கை பாதிப்பு...
ஆனால், கடந்த சில தினங்களாக அங்கும் காற்று மாசுபாட்டின் பாதிப்புகள் அதிகம் உணரப்பட்டன. நகரெங்கும் புகைமூட்டமாக காணப்பட்டதால் நகர அதிகாரிகள் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு எச்சரித்தார்கள்.

பள்ளிகள் மூடல்...
குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப் படவில்லை, அதனைத் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டன.

வானவேடிக்கைக்கு தடை...
மேலும், அந்நகரில் வான வேடிக்கைகள் மற்றும் பொது விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

போக்குவரத்து முடக்கம்...
புகைமூட்டத்தால் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து உருவாகாமல் தடுக்கும் வகையில் அரசு வாகனங்களின் 30 சதவிகிதப் போக்குவரத்தை அதிகாரிகள் நிறுத்தினர். இதனால் சாலைகளில் வாகன நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

தொழிற்சாலைகள் மூடல்...
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தொழிற்சாலைகளையும் தங்களின் உற்பத்தியைக் குறைக்கும்படியும் அல்லது நிறுத்தும்படியும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

விமானங்கள் தாமதம்...
மேகமூட்டம் போன்று பரவியிருந்த புகையால், ஷாங்காயின் புடோங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படவேண்டிய விமானங்களும் தாமதாமாகக் கிளம்பின.

உயர்ந்தது....
உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ள பாதுகாப்பான சூழலுக்குரிய காற்றின் மாசுபட்டு அளவான 25 மைக்ரோகிராமிற்கும் அதிகமாக ஷாங்காயில் நேற்று மதியம் மாசுபாட்டின் அளவு ஒரு கன மீட்டருக்கு 2.5 மைக்ரோ கிராமிலிருந்து 602.5 மைக்ரோகிராமிற்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அபாய அளவு....
இது சுகாதார மையத்தின் அளவுக் குறியீட்டைவிட 23 முதல் 31 முறை வரை அதிகரித்த நிலையில் இருந்தது.கடந்த டிசம்பரிலிருந்து பதிவு செய்யப்பட்ட ஷாங்காயின் சுற்றுச்சூழல் வானிலை அளவீடு நேற்றுதான் அபாயகரமான அளவைத் தொட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications