அது காட்டு செடி இல்ல.. "கஞ்சா" செடி! சம்பவம் செய்துவிட்டு ஆட்டம் போட்ட ஆடுகள்! வெறுத்துப்போன விவசாயி
கிரீஸ்: ஆட்டு மந்தை ஒன்று வளர்க்கப்பட்ட கிலோ கணக்கிலான கஞ்சா செடிகளை மேய்ந்து, போதை தலைக்கேறி ஆட்டம் போட்ட வினோத சம்பவம் நடந்துள்ளது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் கஞ்சா முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சில குறிப்பிட்ட நாடுகளில் மருத்துவ காரணங்களுக்காகக் கஞ்சாவை அனுமதித்துள்ளனர். கடும் கட்டுப்பாடுகளுடன் அங்கே கஞ்சா வளர்க்கப்படும்.

கட்டுப்பாடுகள் இருந்தாலும் கூட சில நேரங்களில் அது கஞ்சா செடி எனத் தெரியாமல் அதை யாராவது எதாவது செய்துவிடுவார்கள். அப்படியொரு சம்பவம் தான் கிரீஸ் நாட்டில் நடந்துள்ளது.
ஆடுகள்: ஆனால், இங்கே கஞ்சா செடிகளைச் சாப்பிட்டது மனிதர்கள் இல்லை. ஆடுகள். கடும் பசியில் சுற்றித் திரிந்த ஆட்டு மந்தை மருத்துவ காரணங்களுக்காகப் பயிரிடப்பட்ட இந்த சுமார் 100 கிலோ கஞ்சாவைச் சாப்பிட்டுள்ளது. சரியாக கிரீஸ், லிபியா, துருக்கி மற்றும் பல்கேரியா நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய டேனியல் புயல் கடந்து செல்லும் போது இந்த சம்பவம் நடந்தது. புயல் ஒரு பக்கம் படுத்த ஆட்டு மந்தை ஒரு பக்கம் சம்பவம் செய்ய நொந்து போய்விட்டார் அந்த விவசாயி.
மத்திய கிரீஸின் தெசலி பகுதியில் அல்மிரோஸ் நகருக்கு அருகில் ஒரு இடத்தில் மருத்துவ காரணங்களாக்க இந்த கஞ்சா செடி வளர்க்கப்பட்டது. கஞ்சா செடி என்பதால் இதை அவர்கள் பெரிய க்ரீன் ஹவுஸ் ரூமில் கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலில் வளர்த்துள்ளனர். இதற்கிடையே சில காலத்திற்கு முன்பு புயல் தாக்கவே ஆடுகளையும் வெளியே மேய விடாமல் உள்ளேயே அடைத்து வைத்துள்ளனர்.
தலைக்கேறிய போதை: அப்போது ஒரு நாள் ஆடுகள் வினோதமாக நடந்து கொண்டுள்ளது. திடீர் திடீரென எழும்பிக் குதித்த ஆடுகள், டான்ஸ் ஆடுவது போல நடப்பது, விடாமல் எதாவது ஒலி எழுப்புவது போன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு இருக்கிறது. அதன் பின்னரே அந்த உரிமையாளருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து உடனடியாக கஞ்சா செடிகள் இருக்கும் இடத்திற்குச் சென்று பார்த்துள்ளார். அங்கே சுமார் 100 கிலோ கஞ்சா மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின்னரே அவருக்குத் தனது ஆடுகள் கஞ்சா செடியை காலி செய்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், "இதற்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. வெப்ப அலை அதிகமாக இருக்கும் சமயத்தில் எங்களுக்கு விளைச்சல் இருக்காது. அதேபோல வெள்ளம் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்கும். இப்போது புதுவித பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்டு மந்தையால் பெரும்பகுதியை இழந்துள்ளேன். என்ன செய்வது என ஒன்றும் புரியவில்லை" என்றார்
கிரீஸ்: கஞ்சாவை மருத்துவ காரணங்களுக்காகப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கிரீஸ் ஒன்றாகும். கடந்த 2018ஆம் ஆண்டில், மருத்துவ காரணங்களுக்காகக் கஞ்சாவை வளர்ப்பதற்கும் அறுவடை செய்வதற்கும் உரிமங்கள் வழங்கப்பட்டது. மேலும், மருத்துவ பயன்பாட்டிற்கு அனுமதி தரும் சட்டத்தையும் கிரீஸின் இடதுசாரி அரசு கொண்டு வந்தது.
முன்னதாக 2017இல் அங்கே மருத்துவ காரணங்களுக்கா கஞ்சாவை இறக்குமதி செய்யவும் அனுமதி தரப்பட்டிருந்தது. 1936இல் கீரிஸ் கஞ்சாவை முழுமையாகத் தடை செய்வதற்கு முன்பு வரை, கிரீஸ் நாட்டில் ஏற்கனவே கஞ்சா உற்பத்தியும் ஏற்றுமதி அதிகம் இருந்தது. அதன் பிறகு சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 2018இல் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. கிரீஸ் மட்டுமின்றி பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளிலும் மருத்துவ காரணங்களுக்காகக் கஞ்சா பயன்படுத்த அனுமதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா: இதுபோல வினோதமான விலங்குகள் கஞ்சாவைச் சாப்பிடுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த நவம்பரில் உத்தரப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் போலீஸ் நிலைய சேமிப்பு அறையில் குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 500 கிலோ கஞ்சாவை அங்குள்ள எலிகள் உட்கொண்டதாக போலீசார் நீதிமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications