"இதயத்தை துளைத்த புல்லட்!" பரிதாபமாக உயிரிழந்த ஷின்சோ அபே.. கடைசி நொடிகளில் நடந்தது என்ன? பரபர தகவல்
டோக்கியோ: ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை காப்பாற்ற எடுக்கப்பட்ட கடைசிக்கட்ட முயற்சிகள் குறித்த சில முக்கிய தகவல்களை டாக்டர்கள் பகிர்ந்து உள்ளனர்.
Recommended Video
ஜப்பான் நாட்டில் அதிக காலம் பிரதமர் பதவியில் இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் ஷின்சோ அபே. இவர் கடந்த 2020இல் தனது பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
நவீன ஜப்பானின் முக்கிய பிரதமராகக் கருதப்படும் இவர், பெருங்குடல் அழற்சி பாதிப்பு காரணமாகவே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து இருந்தார்.

சுருண்டு விழுந்தார்
இருப்பினும், தனது கட்சிக்காக அவ்வப்போது இவர் பிரசார கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டு வந்தார். அப்படித்தான் இன்று நாரா என்ற பகுதியில் இருக்கும் ரயில் நிலையம் அருகே மக்களிடையே அவர் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் அங்குச் சுருண்டு விழுந்தார். முதலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. முதலில் அங்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை.

உயிரிழந்தார்
அதன் பின்னர் அவர் பின்னால் இருந்து சுடப்பட்டது தெரிய வந்தது. அவரது உடலில் இருந்த ரத்தம் கொட்டியது. ஷின்சோ அபே உடனடியாக ஹெலிகாப்பட்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது
தலைநகர் டோக்கியோவில் இருந்து 500 கிமீ தொலைவில் உள்ள நாராவில் ஜப்பான் நேரப்படி காலை 11.30 மணியளவில் ஷின்சோ அபே சுடப்பட்டார். பின்னால் இருந்து கழுத்தில் இரண்டு முறை சுடப்பட்டுள்ளார். அதன் பின்னர் ஆம்புலன்ஸ் வரும் வரை அவரை உயிர்ப்பிக்க அங்கிருந்த ஊழியர்கள் கடுமையாக முயன்றனர். சரியாக மதியம் 12.20 மணியளவில் நாரா மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

5 மணி நேரம் சிகிச்சை
அங்கு அவருக்கு சுமார் 5 மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலன் இல்லாமல் ஜப்பான் நேரப்படி மாலை 5 மணி அளவில் அவர் உயிரிழந்தார். இது குறித்து மருத்துவமனையின் ஹிடெடாடா ஃபுகுஷிமா கூறுகையில், "மருத்துவமனைக்கு அழைத்து வரும் போதே அவர் மாரடைப்பு நிலையில் தான் இருந்தார். அவரை உயிர்ப்பிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. ரத்தம் கூட ஏற்ற்பபட்டது. கடைசி கட்டமாக அனைத்து முயற்சிகளையும் செய்தோம். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக மாலை 5:03 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

இதயத்தைத் துளைத்த குண்டு
பின்னால் இருந்து கழுத்துப் பகுதியில் குண்டுகள் பாய்ந்ததாகவே தெரிகிறது. மொத்தம் இரு குண்டுகள் அவரது உடலுக்குள் துளைத்துச் சென்றது. அதில் ஒரு துப்பாக்கிக் குண்டு அவரது இதயத்தில் துளையை ஏற்படுத்தியது. மற்றொரு குண்டு அந்த காயத்தை மோசமாக்கியது. இதனால் ரத்த இழப்பும் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக அவர் உயிரிழந்தார்" என்று அவர் தெரிவித்தார்.

என்ன காரணம்
அபேவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தப்பி ஓட முயன்ற 41 வயதான டெட்சுயா யமகாமி என்பவரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அபேவை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இதற்காக அவரே சொந்தமாகத் துப்பாக்கி போன்ற ஒன்றையும் தயார் செய்துள்ளார். அபே பிரதமராக இருந்த போது, அவரது செயல்பாடுகளால் தான் பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாகவே கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடைசி நொடிகள்
இதனிடையே சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் கூறுகையில், "அபே பேசிக் கொண்டு இருக்கும் போது, அவருக்குப் பின்னால் ஒருவர் வந்தார். முதல் துப்பாக்கிச் சூடு பொம்மை துப்பாக்கிச் சூடு போலவே இருந்தது. இதில் அபேவும் கீழே விழவில்லை. ஆனால், இரண்டாவது துப்பாக்கிச் சூடு தான் பலமாக இருந்தது. அப்போது தீப்பொறி மற்றும் புகையைக் கூட பார்க்க முடிந்தது. அப்போது தான் அவர் கீழே விழுந்தார். பாதுகாப்புப் படையினரும் அவரை சூழ்ந்து கொண்டனர்" என்றார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications