"விபச்சாரம்".. மனைவியின் தலையை வெட்டி.. தெருவில் எடுத்து சென்ற நபர்.. அதுவும் சிரித்தபடியே..!
விபச்சாரம் செய்ததாக மனைவியின் தலையை வெட்டி எடுத்து சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது
டெஹ்ரான்: மனைவியின் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு, தெருவில் வேகமாக நடந்து சென்றுள்ளார் அந்த இளைஞர்.. பொதுமக்கள் அதை பார்த்து அலறி அடித்து ஓடியுள்ளனர்...!
குடும்பத்தில் தகராறு வருவதெல்லாம் சகஜமானதுதான்.. அதிலும் மனைவியுடன் சண்டை வருவதும் இயல்பானதுதான்...
அதற்காக கோபத்தில் மனைவியின் தலையை வெட்டுவதும், அதைத் தூக்கிக் கொண்டு தெருவில் வலம் வருவதும் கொடூரத்தின் உச்சம்.. இப்படிப்பட்ட சம்பவங்கள் நம்ம ஊரிலும் நடப்பது சர்வசாதாரணமாகிவிட்டது..

நடத்தை
மனைவியை இந்த அளவுக்கு கர்ணகொடூரமாக கொலை செய்ய அடிப்படை காரணம், நடத்தையில் உள்ள சந்தேகம்தான்.. இதற்கு மேலைநாடுகளும் விதிவிலக்கல்ல... அந்த வகையில் ஈரானிலும் ஒரு கொடூரம் நடந்துள்ளது.. திடீரென ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாக ஆரம்பித்துவிட்டது.. இதனால் அந்த வீடியோவை போலீசார் ஆய்வு செய்தனர்.

விபச்சாரம்
ஒரு இளைஞர் தெருவில் ஆவேசமாக வந்து கொண்டிருக்கிறார்.. அவர் கையில் ஒரு மனித தலை இருப்பது பதிவாகி இருந்தது.. அதை பார்த்த தெருமக்கள், அலறி அடித்து கொண்டு ஓடுவதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து விசாரணை துரிதமானது.. ஈரானின் தென்மேற்கு நகரமான அஹ்வாஸில் அந்த பெண் வாழ்ந்து வந்தது தெரியவந்தது.. அவர் பெயர் மோனா ஹெய்டாரி.. வெறும் 17 வயதுதான் ஆகிறது என்பதும், அவரது தலையைதான் இளைஞர் தெருவில் கொண்டு போவதும் கண்டறியப்பட்டது..

மனைவியின் தலை
இது தொடர்பாக அந்த பகுதியில் மறைந்திருந்த அந்த பெண்ணின் கணவர் மற்றும் மைத்துனர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.. அவர்களிடம் விசாரணையும் நடந்து வருகிறது.. அந்த பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டாராம்.. இதனால் வந்த ஆத்திரத்தில்தான், மனைவியின் தலையை கணவரும், அவரது அண்ணனும் சேர்ந்து வெட்டி எடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது..

துண்டிக்கப்பட்ட தலை
துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர் குறித்த வீடியோ ஈரான் நாட்டின் சமூக வலைதளங்களில் பரவியதுமே, பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.. இந்த வழக்கு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரானின் மகளிர் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் என்சீஹ் கசாலி, பாராளுமன்றத்திற்கு கோரிக்கையும் விடுத்துள்ளார்... இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அதிகாரிகளை அவர் வலிய கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறை தண்டனை
இந்த பெண்ணின் கொலையை தொடர்ந்து, குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களைப் பாதுகாக்க சட்டங்களைச் சீர்திருத்த வேண்டும் என்றும், பெண்களின் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கைகளும் எழ ஆரம்பித்துள்ளன.. இப்படித்தான் இதே ஈரானில் கடந்த 2020-ல் பெற்ற மகளின் தலையை துண்டித்து கவுரவ கொலை செய்த தகப்பனுக்கு 9 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.. மேற்கூறிய சம்பவத்துக்கும் கொடிய தண்டனை வேண்டும் என்ற குரல்கள் ஈரானில் ஒலிக்க தொடங்கி உள்ளன.












Click it and Unblock the Notifications