இசை நிகழ்ச்சியின் போது பொங்கி வந்த கடல்.. பரிதாபமாக சிக்கிய மக்கள்.. இந்தோனேசிய சுனாமி வீடியோ
இந்தோனேசியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் சுனாமி தாக்கிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் சுனாமி தாக்கிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது வீடியோவாக வெளியாகி உள்ளது.
இந்தோனேசியாவில் சுனந்தா ஸ்டிரைட் என்ற பகுதியில் இன்று அதிகாலையில் சுனாமி தாக்கியது. தற்போது அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் 168 பேர் பலியாகி உள்ளனர். இந்த சுனாமியில் 600 பேர் காயமடைந்துள்ளனர். 300க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள்.

இசை நிகழ்ச்சி
இந்த நிலையில் இந்த சுனாமி ஏற்பட்ட நேரத்தில் பண்டேலாங் பகுதியில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்து இருக்கிறது. பண்டேலாங் பகுதியில்தான் அதிக அளவில் சுனாமியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பண்டேலாங் பகுதியில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போதே கடல் நீர் உள்ளே வந்துள்ளது.
|
அதிர்ச்சி
மேடையில் பாடகர் பாடிக்கொண்டு இருக்கும் போதே கடல் நீர் உள்ளே வந்துள்ளது. வேகமாக வந்த தண்ணீரில் அங்கிருந்த மக்கள் எல்லோரும் மூழ்கினார்கள். அங்கு 500க்கும் அதிகமான மக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
|
வைரல் வீடியோ
இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. இந்த வீடியோ பெரிய வைரலாகி உள்ளது. இது பார்க்கவே பரிதாபக மனதை உறைய வைக்கும் வகையில் இருக்கிறது.

விவரம் வெளியாகவில்லை
ஆனால் இந்த இசை நிகழ்ச்சியை பார்க்கக் வந்தவர்களுக்கு என்ன ஆனது என்று இன்னும் விவரம் வெளியாகவில்லை. அங்கு இருந்த பார்வையாளர்கள் எல்லோரும் நீரில் சிக்கியதாக தகவல்கள் வருகிறது. ஆனால் இவர்களின் தற்போதைய நிலை குறித்து முழு விவரம் வெளியாகவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications