அபுதாபியை புரட்டி எடுக்கும் கனமழை.. சூப்பர் மார்கெட்களில் திடீர் தட்டுப்பாடு.. நிலைமை எந்தளவு மோசம்?
அபுதாபி: ஐக்கிய அமீரகத்தில் மழை கொட்டி வரும் நிலையில், பொதுமக்கள் கடற்கரைகளில் இருந்து விலகி இருக்கும்படி அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. துபாய் மட்டுமின்றி அபுதாபியிலும் கனமழை கொட்டி வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டின் வேலூர் மற்றும் கரூர் பரமத்தியில் 111 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

ஆனால், பாலைவன நகரமாகக் கருதப்படும் துபாயில் இப்போது கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு சில உயிரிழப்புகளும் கூட ஏற்பட்டுள்ளன.
கடற்கரை: மோசமான வானிலை நிலவும் என்பதால் பொதுமக்கள் தயவுசெய்து கடற்கரைகளில் இருந்து விலகி இருங்கள் என்றும் பள்ளத்தாக்கு பகுதிகள், கனமழை மற்றும் தாழ்வான இடங்களுக்குச் செல்வதை முழுமையாகத் தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய அமீரத்தில் மோசமான வானிலை நிலவும் நிலையில், துபாயில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன..
மேலும், ஐக்கிய அமீரக நகரங்களுக்கு இடையே ஓடும் இன்டர்சிட்டி பஸ் சேவைகளும் நிறுத்தப்பட்டன. துபாய் மற்றும் அபுதாபியை இணைக்கும் நெடுஞ்சாலை கனமழையால் இன்னும் நீரில் தான் மூழ்கிக் கிடக்கிறது.
அபுதாபி மழை: அபுதாபியின் சில பகுதிகளில் தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஜெபல் அலி, அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம், துபாய் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பார்க் ஆகிய இடங்களில் பலத்த காற்று வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில், சில சூப்பர் மார்கெட்கள் மற்றும் உணவகங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன.
பாலைவன நகரமான துபாயில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.. அதேநேரம் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி பெய்த கனமழை அளவுக்கு வானிலை மோசமாக இருக்காது என்று போதிலும் கவனமாக இருக்க அந்நாட்டுத் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விமானச் சேவை: கனமழை விரைவில் குறையும் என்று வானிலை மையம் கூறினாலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்நாட்டு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.. கனமழையால் விமானச் சேவை பாதிக்கப்படலாம் என்பதால் இன்று விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை தாமதமாகலாம் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், துபாயில் உள்ள துறைமுகங்களுக்குத் தற்காலிகமாக அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. பள்ளத்தாக்கு பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடல் சீற்றம் இருக்கலாம் என்பதால் சொகுசு படகில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் வானிலை மோசமாகலாம் என்பதால் டிரைவர்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்து சேவை: மோசமான வானிலையால் முக்கிய வேலைகளில் உள்ளவர்களைத் தவிர அனைவரும் ஒர்க் ஃபர்ம் ஹோமில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அமீரக நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி பேருந்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திடீர் வெள்ளம் மற்றும் தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளையும் மூட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
அடுத்து வரும் நாட்களில் வானிலை சற்று மேம்படும் என்ற போதிலும் அதுவரை எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வானிலையைப் பொறுத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுப்பார்கள் என்பதால் அதை முறையாகப் பின்பற்றும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எல் நினோ: எல் நினோ நிகழ்வு தான் இந்த கனமழைக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. பசிபிக் கடல் பகுதியின் மேற்புற நீர் சூடாவதே இந்த எல் நினோ நிகழ்வு.. இதனால் பல்வேறு பகுதிகளுக்கும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதுபோன்ற ஒரு நிகழ்வு காரணமாகவே இப்போது மழை பெய்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications