Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆ.. கரெக்ட்டா "அங்கே".. மாப்ளை காதுக்கு போன "அந்த" விஷயம்.. போச்சு, திருதிருன்னு விழித்த கல்யாண பெண்

முன்னாள் காதலனை சந்திக்க சென்றதால், திருமணத்தை நிறுத்தினார் மாப்பிள்ளை

Subscribe to Oneindia Tamil

கானா: இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களுக்கு, அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியவில்லை.. திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.. என்ன அந்த வீடியோ?

எத்தனையோ கல்யாணங்கள் தாலி கட்டுவதற்கு முன்பு நின்றுள்ளன.. அதில் ஆணோ, பெண்ணோ, இருவரில் யாராவது ஒருவர் காதல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பார்கள்.. அல்லது வரதட்சணை பிரச்சனைகள் ஏதாவது வெடித்துவிடும்.

இதனால் மணமேடை வரை வந்து நின்று திருமணங்கள் நின்றிருக்கின்றன.. அல்லது அதே கல்யாண மண்டபத்தில் யாரையாவது மாப்பிள்ளை, பெண்ணை பார்த்து திடீர் திருமணங்களும் நடந்துவிடும் நிகழ்வுகளும் உண்டு.

 ஸ்வீட் எடு கொண்டாடு

ஸ்வீட் எடு கொண்டாடு

சில சமயம் கல்யாண வீடு, இழவு வீடாகும் துயரமும் நடந்துவிடுகிறது.. சில மாதங்களுக்கு முன்பு, தாலிகட்டும் நேரத்தில் மணமகன் மடியில் மயங்கி விழுந்து மணப்பெண் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன்புகூட, வடமாநிலத்தில் நடந்த ஒரு திருமண வரவேற்பில், மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை ஸ்வீட் எடுத்து ஊட்டிவிட போனார்.. ஆனால், அந்த பெண் தனக்கு ஸ்வீட் வேண்டாம் என்றார்.. மாப்பிள்ளையோ, வலுக்கட்டாயமாக எப்படி ஸ்வீட் ஊட்டலாம் என்று மணப்பெண் தகராறு செய்தார்..

 பழுத்தது கன்னம்

பழுத்தது கன்னம்

அத்துடன் விடவில்லை.. மணமகனை பளார் என்று ஓங்கி கன்னத்தில் அறைந்தார்.. உடனே மாப்பிள்ளைக்கு கோபம் மண்டைக்கு ஏறிவிட்டது.. அவரும் பதிலுக்கு மணமகளிடம் பாய்ந்தார்.. மணமகள் ஒரு அறை விட்டால், மாப்பிள்ளை பதிலுக்கு பளார் பளார் என 4 அறை அறைந்தார்.. மணப்பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து, சரமாரியாக தாக்கினார்.. பதிலுக்கு மணப்பெண்ணும் மாப்பிள்ளையின் சட்டையை பிடித்து இழுத்து அடித்தார்.. இவ்வளவும் மணமேடையில், எல்லார் முன்பும் அரங்கேறி, கடைசியில் அந்த கல்யாணமே நின்றுவிட்டது. இப்படி நம் ஊர் மட்டுமல்ல வெளிநாடுகளிலு அதிகம் நடந்து வருகிறது.

 காதில் சங்கதி

காதில் சங்கதி

நேற்றுகூட ஒரு சம்பவம் நடந்தது.. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் நடந்துள்ளது.. ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது... ஆனால், கல்யாண பெண்ணுக்கு ஏற்கெனவே ஒரு காதலன் இருந்துள்ளார். திருமணம் நடைபெறுவதற்கு முன்பு ஒரே ஒருமுறை, தன்னுடைய காதலனை சந்திக்க ஆசைப்பட்டுள்ளார்.. அதன்படியே, காதலனை தேடி சென்று, நேரில் பார்த்து பேசிவிட்டும் வந்தார்.. அவ்வளவுதான்.. இந்த விஷயம், மாப்பிள்ளையின் காதுக்கு எட்டிவிட்டது... கோபம் உச்சிக்கு ஏறியது..

 கெஞ்சி கெஞ்சி

கெஞ்சி கெஞ்சி

இந்த கல்யாணத்தை நிறுத்துங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.. இதுனால் அதிர்ச்சி அடைந்த பெண், மாப்பிள்ளையிடம் விளக்கம் சொன்னார்.. ஆனால் அவர் எதையும் காதில் வாங்கவில்லை.. ரோட்டில் கீழே விழுந்து கட்டிப் புரண்டு கெஞ்சினார்.. அப்போதும் மணமகன் அதை ஏற்க மறுத்துவிட்டார்.. மணமகன் வீராப்புடன் கிளம்பி செல்வதும், மணமகள் பின்னாடியே ஓடுவதும், காலில் விழுந்து கெஞ்சுவதும், என அப்பட்டமாக வீடியோவில் பதிவாகி உள்ளது..

ஹைலைட்

ஹைலைட்

இதில் ஹைலைட் என்னவென்றால், நடந்த சம்பவம் குறித்து சிலர் விசாரித்துள்ளார்கள்.. காதலனை, மணப்பெண் சந்திக்க போனது, மாப்பிள்ளைக்கு எப்படி தெரியும் என்று ஆராய்ந்தனர்.. அப்போதுதான், தோழியிடம், காதலனை பார்த்துவிட்டு வருவதாக சொல்லிவிட்டு போயுள்ளார் மணப்பெண்.. அந்த தோழிதான், ஸ்ட்ரைட்டாக வந்து மணமகனிடம் போட்டு தந்தாராம்.. இப்போது இணையத்தில் வைரலாவதே, மணமகள் மாப்பிள்ளையிடம் தரையில் விழுந்து கெஞ்சும் வீடியோதான்.. கடைசியில் இந்த கல்யாணம் நடந்ததா இல்லையா? என்றுதான் தெரியவில்லை!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+