கள்ளத்தொடர்பு சந்தேகம்... கோபத்தில் இரு தங்கைகளை சுட்டுக்கொன்ற பாக். இளைஞர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்து தனது இரு தங்கைகளை அண்ணனே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட லாகூர் நகரில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது 41-வது வடக்கு சவுக் பகுதி. அங்கு வாழ்ந்து வரும் உமர் ஹயாத் என்ற இளைஞருக்கு, தனது இரு தங்கைகள் மீது சந்தேகம். அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக உமர் சந்தேகித்தார்.

இது தொடர்பாக தனது தங்கைகளுடன் உமர் வாக்குவாதம் செய்துள்ளார். தங்களது குடும்ப கவுரவத்தை அவ்விரு பெண்களும் சீர்குலைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அண்ணனின் குற்றச்சாட்டை தங்கைகள் மறுத்துள்ளனர்.
ஆனால், ஆத்திரமடைந்த உமர், தனது தங்கைகளைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று அவர் தலைமறைவானார்.
இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார், இரு பிரேதங்களையும் கைப்பற்றி, மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கவுரவக்கொலை என்ற குற்றப்பிரிவின்கீழ் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள உமரைத் தேடி வருகின்றனர்.
கடந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் 870 பெண்கள் இதுபோல் கவுரவக்கொலை என்ற பெயரில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications