விடுதலைப் புலிகளுக்கு நிதி கொடுத்ததாக பொய் சொல்வதா?: ராஜபக்சே மீது பாயும் எரிக் சோல்ஹெய்ம்
ஆஸ்லோ: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தாம் பெருமளவு நிதி கொடுத்ததாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பொய் பேசி வருவதாக நார்வேயைச் சேர்ந்த முன்னாள் சமாதான தூதர் எரிக் சோல்ஹெய்ம் சாடியுள்ளார்.
இலங்கையின் குருநாகல் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜபக்சே, நார்வேயின் எரிக் சோல்ஹெய்ம் இலங்கைக்கு எதிராக சாட்சி சொல்ல தற்போது முண்டியடித்துக்கொண்டு தயாராகிறார். ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக அவர் சாட்சி சொல்லப்போகிறார்.
அன்று அவர் புலிகளுக்கு பணம் வழங்கியவர் என்பதை அனைவரும் உணர வேணடும். இதனை நோர்வே முறையாக விசாரணை செய்ய வேண்டும். எரிக் சோல்ஹெய்ம் புலிகளுக்கு நிதி வழங்கியதற்கான சாட்சி எங்களிடம் இருக்கிறது.
President Rajapaksa tells lies about me as election approaches. I will set the truth straight tomorrow:
https://t.co/askRp3Y7UP
— Erik Solheim (@SolheimDAC) November 16, 2014 " உங்கள் இராணுவத்தால் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்கவே முடியாது.. அவர்கள் யுத்தத்தில் மிகத் திறமையானவர்கள்" என்று என்னிடம் கூறியவர்தான் எரிக் சோல்ஹெய்ம். இதற்கு பதிலாக, "பிரபாகரன் வடக்குக் காட்டில் பிறந்தவர் என்றால் நான் தெற்குக் காட்டில் பிறந்தவன்: ஒரு கை பார்ப்போம்" என்றேன்" என பேசியிருந்தார்.
ராஜபக்சேவின் இந்த பேச்சை தமது ட்விட்டரில் குறிப்பிட்டு, தேர்தலுக்காக ராஜபக்சே பொய் சொல்கிறார்... உண்மையை நாளை (இன்று) தெரிவிக்கிறேன் என்று பதிலடி கொடுத்துள்ளார் எரிக் சோல்ஹெய்ம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications