யு.எஸ்.ஸில் விமான விபத்து: கூடைப்பந்து போட்டியை பார்த்துவிட்டு திரும்பிய 7 பேர் பலி
இலினாய்ஸ்: அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 7 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் இன்டியானாபோலிஸில் நடந்த என்.சி.சி.ஏ. ஆண்கள் கூடைப்படந்து சாம்பியன்ஷிப் போட்டிகளை காண செஸ்னா 414 என்ற சிறிய ரக விமானத்தில் சென்றனர். திங்கட்கிழமை இரவு நடந்த போட்டியை பார்த்த அவர்கள் அன்றே தங்களின் வீடுகளுக்கு விமானம் மூலம் கிளம்பினர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை விமானம் இலியான்ஸில் உள்ள ப்ளூமிங்கடன் அருகே விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்தது. இதில் விமானத்தில் இருந்த 7 பேரும் பலியாகினர்.
பலியானவர்களில் இலினாய்ஸ் மாநில பல்கலைக்கழக ஆண்கள் கூடைப்பந்து அணியின் பயிற்சியாளர் ரோரி வார்ட் மற்றும் விளையாட்டுத் துறை துணை தலைவர் ஆரன் லீட்ச் ஆகியோர் அடக்கம். அவர்கள் இருவரும் பலியானதை இலினாய்ஸ் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.
விமானத்தில் 5 பேர் இருந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் விமானத்தில் 7 பேர் இருந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். அதிகாலை 3.15 மணிக்கு மீட்பு பணியினர் விமானம் விழுந்த இடத்தை அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications