நீள மூக்கு பாம்பு.. பாவம் பார்த்து தொட்ட இளைஞர்! அடுத்த நொடியில் நடந்த ஷாக் சம்பவம்
பெய்ஜிங்: பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பதெல்லாம் பழைய பழமொழி, இப்போ பாருங்க பாம்புக்கு என் கையால் உணவு கொடுக்கப்போகிறேன் என்று கூறி, பாம்பிடம் கை நீட்டிய இளைஞருக்கு சோக சம்பவம் நடந்திருக்கிறது. பாம்பிடம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.
பெய்ஜிங்கை சேர்ந்தவர், ஹுவாங். இவருக்கு சிறு வயதிலிருந்து பாம்புகள் மீது அலாதி பிரியம். படையப்பா ரஜினி மாதிரி விஷ பாம்புகளை வெறும் கையால் பிடித்து சாகசம் காட்டியிருக்கிறார்.

மூக்கு பாம்பு
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், ஹுவாங்குக்கு ஏதோ சூப்பர் பவர் இருப்பதாக ஏற்றி விட்டிருக்கிறார்கள். இதையும் நம்பிய அவர், தனது வீட்டில் கொடிய விஷம் கொண்ட நீண்ட மூக்கு விரியன் என்கிற பாம்பை செல்ல பிராணியாக வளர்க்க தொடங்கியுள்ளார். இந்த வகை பாம்புகள் கொஞ்சம் ஏடாகூடமானவை. ரொம்பவும் ரோஷக்கார பயபுள்ள. சட்டென கோபப்படும். எளிதில் கடித்துவிடும். மறைந்திருந்து வேட்டையாடுவதில் இவை கில்லாடிகள்.
சீனாவில் இந்த பாம்புகளுக்கு 5 அடி பாம்புகள் என்று பட்டப்பெயர் உண்டு. அதாவது இந்த பாம்பு கடித்தால், 5 அடியை எடுத்து வைப்பதற்குள் உயிரிழந்துவிடுவார்களாம். அந்த அளவுக்கு விஷம் நிறைந்த பாம்பு இது.
மரணம் நிச்சயம்
இதைத்தான் ஹுவாங் கடந்த சில ஆண்டுகளாக வளர்த்து வந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் இந்த பாம்புக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறது. சரியாக உணவை எடுத்துக்கொள்ள முடியவில்லை. பாம்பின் நிலையை பார்த்து பரிதாப்பபட்ட ஹுவாங், பாம்புக்கு தனது கையால் உணவை கொடுத்திருக்கிறார். பாம்புக்கு பாயாசம் கொடுத்தால், படம் எடுக்காமல் இருக்குமா என்ன? அது தன் இயல்பு குணத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. உணவு கொடுத்த கையை ஒரே போடாக போட்டிருக்கிறது.
விரல் வெட்டு
அப்புறம் என்ன? அடித்து பிடித்து ஆஸ்பத்திரி போயிருக்கிறார் ஹுவாங். இந்த வகை பாம்புகளுக்கு எல்லா மருத்துவமனைகளிலும் விஷ முறிவு ஊசி இருக்காது என்பதால், அவரை வேறு ஹாஸ்பிட்டலுக்கு மாற்றியிருக்கிறார்கள். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஹுவாங்கின் கட்டை விரலை கட் செய்து எடுத்திருக்கிறார்கள். விரலை எடுக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து என்பதால் மருத்துவர்கள் இப்படி செய்திருக்கிறார்கள்.
உயிர் பிழைத்த இளைஞர்
இந்த விஷம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "நீண்ட மூக்கு விரியன் பாம்பின் பல் நீளமானவை. அவற்றின் விஷயம் ரத்தம் உறைதலை தடுக்கும். அதாவது, உள் உறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்படும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உள் உறுப்புகள் செயலிழக்க தொடங்கும். இறுதியாக மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு வலிப்பு வரும். அதோடு கதை முடிந்தது" என்று தெரிவித்திருக்கின்றனர். நல்வாய்ப்பாக, ஹுவாங்குக்கு இப்படியான பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னரே அவரை மருத்துவர்கள் காப்பாற்றியிருக்கிறார்கள்.
என்ன செய்ய வேண்டும்?
எனவே மக்களே பாம்பை பார்த்தால், பார்த்தும் பார்க்காததும் போல சைஸாக நழுவி விடுங்கள். ஒருவேளை வீடுகளுக்குள் பாம்பு வந்துவிட்டால், அதை பிடிக்க தீயணைப்பு வீரர்களையோ, பாம்பு பிடி வீரர்களையோ கூப்பிடுங்கள். பாம்பை பிடித்த சீன் போடுகிறேன் என விபரீத முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்பதே இந்த சம்பவம் சொல்லும் பாடம்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications