"போய் **** பண்ணுங்க".. உக்ரைன் பாம்பு தீவில் ரஷ்யா நிகழ்த்திய கொடூரம்! ரத்த சிவப்பாக மாறிய கருங்கடல்
மாஸ்கோ: உக்ரைன் நாட்டின் பாம்பு தீவு பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதல் இணையம் முழுக்க விமர்சனங்களை சந்தித்துள்ளது.
Recommended Video
உக்ரைனில் ரஷ்யா போர் நிகழ்த்தி வரும் நிலையில் அங்கு ரஷ்ய படைக்க வேகமாக முன்னேறி வருகிறது. ரஷ்ய படைகள் தற்போது அந்நாட்டு தலைநகர் கீவிற்கு வெளியே தாக்குதல் நடத்தி வருகிறது. மிக வேகமாக ரஷ்யா படைகள் முன்னேறி வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் விரைவில் ரஷ்யாவிடம் வீழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நாள் போரை விட இரண்டாம் நாள் போர் உக்ரைனில் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து வருகிறது. ரஷ்யா உக்ரைனில் ஏவுகணைகள், ராக்கெட்டுகள், பீரங்கிகள் மூலம் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஸ்னேக் தீவு
இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைனுக்கு சொந்தமான ஸ்னேக் தீவு எனப்படும் பாம்பு தீவை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. ரஷ்யா - உக்ரைன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் கருங் கடலில் இந்த பாம்பு தீவு உள்ளது. இது உக்ரைனுக்கு பாதுகாப்பு ரீதியாக மிக மிக முக்கியமான தீவு ஆகும். உக்ரைன் கட்டுப்பாட்டில்தான் சோவியத் யூனியன் உடைந்த காலத்தில் இருந்தே இது இருந்தது. எல்லை ரீதியாக இதை ரஷ்யா கைப்பற்ற துடித்து வந்தது.

பாம்பு தீவு
2014ல் உக்ரைனின் கிரிமியாவை கைப்பற்றிய ரஷ்யா அதை தனது நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்தது. அப்போதே பாம்பு தீவை கைப்பற்ற ரஷ்யா தீவிரமாக முயன்றது. இப்போது இந்த போரை பயன்படுத்தி பாம்பு தீவை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. இந்த மோதல் நடந்த போது பாம்பு தீவில் இருந்த உக்ரைன் வீரர்களுக்கும், ரஷ்ய வீரர்களுக்கும் இடையில் நடந்த மோதல்தான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை பாம்பு தீவின் எல்லைக்குள் ரஷ்யாவின் போர் கப்பல் நுழைந்தது.

போர் கப்பல்
ரஷ்யாவின் போர் கப்பல் அந்த எல்லைக்குள் நுழைந்ததும் அவர்களை மிரட்டும் வகையில் அந்த தீவில் இருந்த உக்ரைன் வீரர்கள் ரேடியோ மூலம் தொடர்பு கொண்டு ரஷ்ய வீரர்களை எச்சரித்தனர். அப்போது நடந்த ரேடியோ உரையாடல்தான் உக்ரைனையும், உலக நாடுகளையும் உலுக்கி உள்ளது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்
உக்ரைன் வீரர் - இது உக்ரைன் நாட்டு தீவு, எங்கள் எல்லைக்குள் நீங்கள் வர கூடாது.
ரஷ்ய போர் கப்பல் தளபதி - நாங்கள் ரஷ்ய போர் கப்பல். நீங்கள் உடனே சரண் அடையுங்கள். இல்லையென்றால் உங்கள் மீது தாக்குவோம்.
உக்ரைன் வீரர் இன்னொரு வீரரிடம் - அவர்கள் தாக்க போகிறார்கள் .. போய் **** (ஆங்கில கெட்ட வார்த்தை) செய்ய சொல்லட்டுமா?
ரஷ்ய தளபதி - உங்களிடம் மீண்டும் சொல்கிறேன்.. சரண் அடையுங்கள்.. இல்லையென்றால் தாக்குவோம்
உக்ரைன் வீரர் - போங்க.. Go and F*** yourself என்கிறார்.

பீரங்கி
அடுத்த நொடி அந்த ரஷ்ய போர் கப்பலில் இருந்த பீரங்கி முழங்கியது. சரமாரியாக அந்த தீவில் ரஷ்யாவின் அந்த போர் கப்பல் தாக்கியது. இதில் அந்த தீவில் இருந்த 13 உக்ரைன் வீரர்களும் பலியானார்கள். பாம்பு போல பார்க்க அழகாக இருக்கும் இந்த தீவு. தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. ரஷ்யா தாக்குதலால் இதுவரை 137 உக்ரைன் வீரர்கள் பலியாகி இருப்பதாகவும், உக்ரைன் வீரர்கள் 13 பேர் பாம்பு தீவில் பலியானதுதான் ஒரே இடத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய உயிர் சேதம் என்று அந்நாட்டு அதிபர் சோலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

வீர மரணம்
உக்ரைன் பாம்பு தீவில் ஏற்பட்ட இந்த கொடூரத்தை பாம்பு தீவு கொடூரம் என்று உக்ரைன் மக்கள் தெரிவித்து வருகிறார்கள். கருங்கடல் ரத்தத்தால் சிவப்பு கடலாக மாறியதாக உக்ரைன் மக்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் வீரர்கள் பேசிய இந்த ஆடியோ உக்ரைன் நாட்டு மக்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் மரணத்திற்கு அஞ்சாமல் உக்ரைன் வீரர்கள் ரஷ்ய வீரர்களிடம் சரண் அடையாமல் இப்படி துணிச்சலாக பேசியதும் மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications