அமெரிக்கா: ராணுவ தளத்தில் 3 பேரை சுட்டுக் கொன்று தன்னை தானே சுட்டு வீரர் தற்கொலை
டெக்சாஸ்: அமெரிக்காவில் உள்ள போர்ட் ஹூட் என்ற ராணுவ தளத்தில் ராணுவ வீரர் ஒருவர் 3 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள போர்ட் ஹூட் ராணுவ தளத்தில் ராணுவ வீரர் ஒருவர் நேற்று திடீர் என்று கண்மூடித்தனமாக சுடத் துவங்கினார். இதில் 3 பேர் குண்டு பாய்ந்து பலியாகினர், 16 பேர் காயம் அடைந்தனர். அதன் பிறகு அந்த வீரர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணையில் அவர் பெயர் இவான் லோபஸ் என்பதும், அவர் ஈராக்கில் பணிபுரிந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. ஈராக் போரின்போது அங்கு பணிபுரிந்த இவானுக்கு மனநலப் பிரச்சனைகள் இருந்துள்ளது. அதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் தான் அவர் 3 பேரை கொன்றுவிட்டு தானும் சுட்டுக் கொண்டு இறந்துள்ளார்.
முன்னதாக கடந்த 2009ம் ஆண்டு இதே போர்டு ஹூட் ராணுவ தளத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் அமெரிக்கா முஸ்லீம் நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து கண்மூடித்தனமாக சுட்டதில் 13 ராணுவ வீரர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications