கழட்டிவிட்ட சீனா.. ரொம்ப அவசரம்.. உலக நாடுகளுக்கு SOS மெசேஜ் அனுப்பிய வடகொரியா.. கலங்கும் கிம் ஜோங்?
பியாங்யாங்: உலக நாடுகளிடம் இருந்து தனித்தே இருக்கும் வடகொரியா தற்போது அதே உலக நாடுகளிடம் கையேந்தும் நிலைமைக்கு சென்று இருப்பதாக தகவல்கள் வருகிறது. நிலைமை சரியில்லை என்று வடகொரியாவின் இரும்பு கோட்டையில் இருந்து தகவல்கள் கசிய தொடங்கி உள்ளன.
Recommended Video
உலகில் அதிக அணு ஆயுதங்களை கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக வடகொரியா கருதப்படுகிறது. ஏகப்பட்ட ஏவுகணைகள், ஆயுதங்கள், ராணுவ வீரர்கள் கொண்ட பலம் வாய்ந்த நாடாக வடகொரியா பார்க்கப்படுகிறது. ஆனால் பொருளாதார ரீதியாக அந்த நாடு பலம் கொண்டது கிடையாது.
பொருளாதார ரீதியாக வடகொரியா பெரிய அளவில் இழப்புகளை சந்தித்துள்ளது. அதிலும் பல்வேறு பொருளாதார தடை காரணமாக மேற்கு உலகத்தில் இருந்தே வடகொரியா மொத்தமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

துண்டிப்பு
முக்கியமாக பொருளாதார தடைகள் காரணமாக மருத்துவ ரீதியாகவும் வடகொரியா மிகவும் பின்தங்கி உள்ளது. ஆப்ரிக்க நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியே வடகொரியாவில் உள்ளது. சர்வதேச அமைப்புகளும் வடகொரியாவுக்கு உதவ முடியாத நிலையே உள்ளது. ஒருவேளை அந்த நாட்டில் கொரோனா மட்டும் ஏற்பட்டால் மொத்தமாக நாட்டின் நிலைமை மோசமாகிவிடும் என்றே கருதப்பட்டது.

தீவிரம்
இதனால்தான் வடகொரியா கடந்த ஒன்றரை வருடமாக எல்லைகளை மூடி கண்டிப்பு காட்டியது. வெளிநாட்டு மக்கள் உள்ளே வந்து கொரோனாவை பரப்பாத அளவிற்கு கடும் கட்டுப்பாடுகளை வடகொரியா விதித்து இருந்தது. இதனால் அங்கு கொரோனாவும் ஏற்படாமல் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வடகொரியாவில் கொரோனா பரவல் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

கொரோனா
வடகொரியாவில் கொரோனா பரவல் தொடங்கிவிட்டது, மக்கள் பாதிக்க தொடங்கிவிட்டனர் என்று சர்வதேச ஊடகங்கங்கள் கூறுகின்றன. முக்கியமாக சமீபத்தில் வடகொரியாவின் உயர் அதிகாரிகள் சிலரை கிம் ஜோங் உன் சஸ்பெண்ட் செய்தார். அவர்கள் எல்லோரும் கொரோனா தடுப்பு பணிகளை கவனித்து வந்த உயர் அதிகாரிகள் ஆவர். இவர்கள், கவனக்குறைவாக செயல்பட்டதால் அங்கு கொரோனா ஊடுருவிவிட்டதாக கூறப்பட்டது.

காரணம்
இதன் காரணமாகவே வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் இவர்களை நீக்கினார் என்று கூறப்பட்டது. பொதுவாக இப்படி கிம் ஜோங் உன் ஏதாவது தவறு நடந்தால் அதை வெளியே காட்ட மாட்டார். வடகொரியா அரசு எப்போதும் தனது தவறுகளை ஒப்புக்கொண்டதே இல்லை. ஆனால் இந்த முறை முதல்தடவையாக தனது தவறை வடகொரியா அரசு ஒப்புக்கொண்டு அதிகாரிகளை மாற்றி உள்ளது.

ஏன்
உலக நாடுகளுக்கு வடகொரியா அனுப்பும் எஸ்ஓஎஸ் மெசேஜ் இது என்று கூறுகிறார்கள். நாங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவிட்டோம், எங்களுக்கு உதவுங்கள் என்று வடகொரியா சொல்லாமல் சொல்வதாக தெரிகிறது. அதாவது உலக நாடுகளிடம் இத்தனை நாட்களாக ஒதுங்கி இருந்த வடகொரியா முதல் முறையாக, எங்களுக்கு உதவுங்கள் என்று, இந்த சஸ்பெண்ட் மூலம் உதவி கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சீனா
அதோடு பொதுவாக வெளிநாடுகளிடம் உதவி கேட்காத வடகொரியா இப்போது இறங்கி வர சீனாவும் ஒரு காரணம் என்கிறார்கள். சீனா - வடகொரியா இடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக உறவு சரியில்லை. முதலில் சீனா மீது வடகொரியா கோபத்தில் இருந்ததாகவும், அதன்பின் வடகொரியா சீனாவுடனான உறவை புதுப்பிக்க நினைத்தும் கூட சீனா அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

பேச்சு
வடகொரியாவின் பொருளாதார சரிவில் சீனா எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதுதான் இரண்டு நாட்டு கருத்து வேறுபாட்டுக்கு காரணம் என்கிறார்கள். இந்த நிலையில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழாவை பயன்படுத்தி, அந்த நாட்டுடன் உறவை, நட்பை புதுப்பிக்கலாம் என்று வடகொரியா கருதுகிறதாம்.

சிக்கல்
ஒருவேளை சீனா இறங்கி வந்து வடகொரியாவிற்கு உதவி செய்யவில்லை என்றால் வடகொரியா சர்வதேச உதவியை நாடும் என்கிறார்கள். வடகொரியா ஏற்கனவே பொருளாதார ரீதியாக மிக மோசமான சரிவில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சர்வதேச உதவியை நாடுவதை தவிர அந்த நாட்டிற்கு வேறு வழியில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications