தென்னாப்பிரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களை அனுமதிக்கும் முதல் மசூதிக்கு மூடுவிழா?
கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர்களை அனுமதிக்கும் மசூதி மூடப்பட உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் மசூதி ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. அந்த மசூதியில் ஓரினச்சேர்க்கையாளர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பெண்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.
இது முனிசிபால் விதிக்கு புறம்பானது என்று கூறி அந்த மசூதியை மூடவுள்ளனர்.

நிறுவனர்
எனது எதிர்ப்பாளர்கள் தான் மசூதியை மூட வைக்க வழி செய்கிறார்கள். நகர கவுன்சில் அதிகாரிகள் முஸ்லிம் தலைவர்களின் வற்புறுத்தலால் மசூதியை மூட உள்ளனர் என்று மசூதியின் நிறுவனரான முஸ்லிம் கல்வியாளர் தாஜ் ஹார்கி தெரிவித்துள்ளார்.

மசூதி
ஹார்கி சேமிப்பு கிடங்காக இருந்த இடத்தை மசூதியாக மாற்றுவது குறித்து உரிய ஆவணங்களை சமர்பிக்கவில்லை என்று நகர கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் அக்டோபர் மாதம் 23ம் தேதிக்குள் ஆவணங்களை சமர்பிப்பதாக ஹார்கி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு
மசூதி இருக்கும் இடத்திற்கு நகர கவுன்சில் ஒப்புதல் வழங்குவது கடினம். ஏனென்றால் அந்த இடத்தில் பாதுகாப்பு வசதிகள் இல்லை. அருகில் ஒரு ஒர்க்ஷாப் உள்ளது. அங்கிருந்து வரும் புகையில் மசூதிக்கு வருபவர்களுக்கு பிரச்சனை என்று நகர கவுன்சில் கருதுகிறது. மேலும் மசூதியில் வாகன நிறுத்துமிடமும் இல்லை என்கிறது கவுன்சில்.

வசதி இருக்கிறது
மசூதியை திறந்த கையோடு 2 மணிநேரத்தில் மூடிவிட்டதாக கவுன்சில் கூறுவதில் உண்மை இல்லை. மசூதி வளாகத்தில் போதிய வாகன நிறுத்துமிடம் உள்ளது என்றார் ஹார்கி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications