12 டூ 17 வயதினருக்கு பைசர் தடுப்பூசி.. அடுத்த வாரம் துவக்கம்.. தென்னாப்பிரிக்கா அதிரடி அறிவிப்பு
12 வயது முதல் 17 வயது வரை கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவாகி உள்ளது
கேப்டவுன்: 12 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் 70 சதவீதம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்றும் தென் ஆப்பிரிக்கா முடிவு எடுத்துள்ளது.
உலகம் முழுவதும் தொற்று பாதிப்பு இன்னும் நீங்கவில்லை.. டெல்டா வகை வைரஸ் பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகமாக உள்ளது.
முதலிடத்தில் அமெரிக்கா, அடுத்து இந்தியா, அடுத்து பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன... உலகம் முழுவதும் இதுவரை 240,823,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழப்பு
4,904,650 பேர் சிகிச்சை பலனின்றி இதுவரை உயிரிழந்துள்ளனர்.. 218,076,826 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய நிலையில் 17,842,101 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொரோனா வைரஸுக்கு சிகிச்சை முறைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், தடுப்பூசிகளை மட்டுமே நம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், உலக மக்கள் அனைவருமே தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அனுமதி
தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது... இந்த சான்றிதழ்களை வைத்துதான் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கோ, அல்லது ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கோ அனுமதி கிடைத்து வருகிறது.. எனினும், தென்னாப்பிரிக்கா, மொரோக்கோ, துனிசியா, எத்தியோப்பியா, எகிப்து போன்ற நாடுகள் கொரோனா தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன...
12 டூ 17 வயதினருக்கு பைசர் தடுப்பூசி.. அடுத்த வாரம் துவக்கம்.. தென்னாப்பிரிக்கா அதிரடி அறிவிப்பு

கட்டுப்பாடுகள்
இதற்கு காரணம், ஆப்பிக்கா கண்டத்தில் பெரும்பாலான நாடுகள் ஏழ்மை நிலையில் உள்ளன.. அங்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டது.. இதனால் அங்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே காணப்பட்டது. அதனால்தான், கடுமையான கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டன. தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து தருவித்து கொண்டாலும், அதை செலுத்தி கொள்ள ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் தயக்கம் காட்டுவதாகவும் செய்திகள் வந்தன..

பயம்
தடுப்பூசி செலுத்த வருபவர்களை பார்த்தாலே காட்டுக்குள் பயந்து ஓடி மறைந்து கொண்ட சம்பவங்களும் உண்டு. சில சமயம், இறக்குமதி ஆன தடுப்பூசிகள், அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்வுகளும் கடந்த காலங்களில் உண்டு.. எனினும் தற்போது இந்த நிலை குறைந்து வருகிறது.. பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியையும் அந்த நாட்டு அரசு முன்னெடுத்தது.. அந்த வகையில் தற்போதும் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தடுப்பூசி
அதன்படி, 12 வயது முதல் 17 வயது உள்ளவர்களுக்கு, அடுத்த வாரம் முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அந்த நாடு அறிவித்துள்ளது. அமெரிக்கா, இந்தியா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், கனடா உள்ளிட்ட நாடுகளில் 2 வயது முதல் 17 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பை தென்ஆப்பிரிக்கா தற்போது அறிவித்துள்ளது.. இதுகுறித்து அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:

ஆப்பிரிக்கா நாடு
"வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் 70 சதவீதம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்த தென் ஆப்பிரிக்கா முடிவு எடுத்துள்ளது.. எனவே, அந்த இலக்கை எட்டும் வகையில் 12 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்... குறிப்பாக பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது... பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் மட்டுமே 12 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு செலுத்தப்பட உள்ளது... பாதுகாப்பை கருத்தில் கொண்டு 2வது டோஸ் இப்போதைக்கு அவர்களுக்கு செலுத்த போவதில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications