இனவெறிக்கு எதிராக போராடியவர்.. ஈழத்தமிழருக்கு குரலாக ஒலித்தவர்.. யார் இந்த தேஸ்மண்ட் டுடு!

Subscribe to Oneindia Tamil

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடியவரும் பேராயருமான தேஸ்மண்ட் டுடு காலமானார். அவருக்கு வயது 90.

வன்முறையற்ற வழியில் இன ஒதுக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காக அவருக்கு 1984ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் பேராயராகவும், தென்னாப்பிரிக்க மாநில திருச்சபை பிரைமேட்டாகவும் பணியாற்றிய முதல் கருப்பினத்தவராவார்.

South African hero Desmond Tutu died at the age of 90

எய்ட்ஸ் நோய், காசநோய், தற்பாலினர் வெறுப்பு, திருநங்கையர், வறுமை, இன பாகுபாடு ஆகிய விவகாரங்களில் தீவிரமாக பணியாற்றியுள்ளார். இஸ்ரேல் நாட்டால் காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்கள் பற்றி ஐநாவால் அனுப்பப்பட்ட குழுவுக்கு ஒரு யோசனை தெரிவித்தார்.

அதில் நிறத்தால் பாகுபடுத்தும் இந்த நாட்டில் இருக்கும் உங்களது முதலீடுகளை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள், இதனால் இழப்பு எங்களுக்குத்தான். அது ஒரு அற்புதமான நோக்கத்திற்கான இழப்பு என்றார். 1987ஆம் ஆண்டில் பாசெம் இன் டெர்ரிசு பரிசையும் 1999ஆம் ஆண்டு சிட்னி அமைதிப் பரிசையும் 2005ஆம் ஆண்டில் காந்தி அமைதிப் பரிசையும் பெற்றார்.

South African hero Desmond Tutu died at the age of 90

2009ஆம் ஆண்டு அமெரிக்கக் அதிபரின் சுதந்திரப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இனரீதியாகப் பிளவுற்று இருந்த தென்னாப்பிரிக்காவில் சமரசம் ஏற்படுத்த அவர் மிகவும் பாடுபட்டார். இவர் 1931 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு நாமலிசோ லியா ஷென்ஸானே என்ற மனைவியும் 4 பிள்ளைகளும் உள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என ஓங்கி குரல் கொடுத்தவர். இனவெறிக்கு எதிராக நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து போராடியவர். இவருக்கு 1990 களில் அவருக்கு புரோஸ்டேட் எனப்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு சிகிச்சை பெற அவர் அண்டைய நாடுகளில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+