குழந்தை பலாத்கார காட்சியை நடித்துக் காட்டுக... பள்ளித்தேர்வுக் கேள்வியால் அதிர்ச்சி
ஜோகன்னஸ்பர்க்: குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற காட்சியை தத்ரூபமாக நடித்துக் காட்ட வேண்டும் என நாடகப் பிரிவு மாணவர்களுக்கு தேர்வில் கேட்கப் பட்ட வினாவால் தென்னாப்பிரிக்காவில் சர்ச்சை உருவாகியுள்ளது.
நாடகப் பிரிவு பயிலும் மாணவர்களுக்கு ஏதேனும் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை நடித்துக் காட்டச் சொல்லி தேர்வில் கேள்வி கேட்கப்படுவது வழக்கம் தான். ஆனால், நான்கு நிமிடங்களுக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நாடான தென்னாப்பிரிக்காவில், மேலும், குழந்தைகள் மீதான வன்முறையை அதிகரிக்கும் வகையில் சிந்தனைத் தூண்டக் கூடியதாக தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் அதிர்ந்து போயுள்ளார்கள்.
சமீபத்தில், நடைபெற்ற உயர்நிலை பள்ளித் தேர்வில், நாடகப் பிரிவு மாணவர்களுக்கு ஒரு கேள்விக் கேட்கப் பட்டிருந்தது. அதில், ஒன்பது மாதக் குழந்தை மீது நடைபெறும் பாலியல் பலாத்கார தாக்குதலை தத்ரூபமாக நடித்துக் காட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இதற்கு அவர்களுக்கு ரொட்டித் துண்டு, துடைப்பமும் குறியீடுகளாக அளிக்கப்பட்டிருந்தன. இவற்றைப் பயன்படுத்தி அந்த மாணவர்கள் பலாத்காரக் காட்சியினை விளக்கவேண்டும் என்று கேள்வித்தாளில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அக்காட்சிகளைப் பார்ப்பவர்களுக்கு அதன் பயங்கரம் வெளிப்படும் வண்ணம் கொடூரமாக அந்த செயலை நடித்துக்காட்ட வேண்டும் எனக் குறிப்பு அளிக்கப் பட்டிருந்தது.
இக்கேள்வி, கடந்த 2001 ஆம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவில் ஒன்பது மாத குழந்தை ஒன்றிற்கு நடைபெற்ற கொடூரமான பாலியல் பலாத்காரச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து லாரா ஃபூட் நியூட்டன் என்பவரால் எழுதப்பட்ட 'ஷெபங்' என்ற விருதுகள் குவித்த நாடகத்தின் சாராம்சத்திலிருந்து எடுக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் குழு விளக்கமளித்துள்ளது. எனினும், இதுபோன்ற கேள்விகள் மாணவர்கள் மனதில் தீய எண்ணங்களைத் தோற்றுவிக்கும் என விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications