தென்கொரியாவில் பொதுமக்கள் மீது வீசப்பட்ட குண்டு.. பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை என்ன?
சியோல்: அமெரிக்காவுடன் சேர்ந்து தென்கொரிய ராணுவம் விமான பயிற்சியை மேற்கொண்டிருந்தது. இந்த பயிற்சியின்போது மிகவும் சக்தி வாய்ந்த குண்டுகளை பொதுமக்கள் குடியிருப்புகள் மீது வீசியிருக்கிறது. இதனால் 30 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். 2 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது என்று அப்டேட்கள் வந்திருக்கின்றன.
இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. வழக்கமாக வடகொரியாதான் இதுபோன்ற வேலைகளை செய்யும். ஆனால் சமீப காலமாக தென்கொரியா தவறுகளை செய்ய தொடங்கியிருக்கிறது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

போர் பயிற்சி:
வடகொரியா-ரஷ்யாவுக்கு எதிராக, ஒவ்வொரு ஆண்டும் Freedom Shield என்கிற பெயரில் அமெரிக்க ராணுவமும், தென்கொரிய ராணுவமும் இணைந்து ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ளும். இந்த ஆண்டும் இந்த பயிற்சி தொடங்கியது. இந்த பயிற்சியில் உண்மையான ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். டம்மி ஆயுதங்களைத்தான் பயிற்சிக்கு பயன்படுத்துவார்கள். ஆனால், live-fire என்கிற பயிற்சியில் உண்மையான குண்டுகள் பயன்படுத்தப்படும். அப்படித்தான் நேற்று live-fire பயிற்சி நடந்தது.
பாதிக்கப்பட்ட மக்களின் நிலை என்ன?:
பயிற்சியின்போது வட கொரிய எல்லைக்கு அருகிலுள்ள போச்சியான் நகரில் குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. ஆனால், உண்மையான இலக்கு இந்த நகரம் கிடையாது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியைதான் குறி வைத்து தாக்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் தவறுதலாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது. இதில் சுமார் 30 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். 2 பேரின் நிலை கவலைக்கிடமானதாக இருக்கிறது. இந்த சம்பவத்தில் MK-82 ரக குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன.
வெடிகுண்டு தாக்கம்:
ஒவ்வொரு குண்டும் 227 கிலோ எடையிருக்கும். குண்டுக்குள் TNT, Tritonal போன்ற வெடி பொருட்கள் இருக்கும். குண்டு விழுந்த இடத்தை சுற்றி சுமார் 30 மீட்டர் வரை புல் பூண்டு கூட இருக்காது. 150 மீட்டர் வரை குண்டு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். அந்த அளவுக்கு சக்திவாய்ந்தது இது. அமெரிக்காவின் F-16, F-15, F/A-18, B-2, B-52 போன்ற போர் விமானங்களில் இந்த வகை குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய பெரிய கட்டிடங்களை அழிக்க இவை பயன்படுத்தப்படும்.
எப்படி நடந்தது?:
குடியிருப்பு பகுதிக்குள் குண்டு விழுந்ததையடுத்து உடனடியாக போர் பயிற்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கிறது. மீட்பு பணிகள் வேகமாக நடத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். சம்பவத்திற்கான காரணம் குறித்து ராணுவ விசாரணை தொடங்கிப்பட்டிருக்கிறது என்றும், விமானிகள் ஒவ்வொருவரும் கேஎஃப்-16 வகை ராணுவ போர் விமானங்களை 200-400 மணி நேரம் வரை ஓட்டிய அனுபவத்தை கொண்டிருக்கிறார்கள். கடந்த 2-3 ஆண்டுகளாக இவர்கள் இந்த விமானங்களை இயக்கி வந்திருக்கிறார்கள் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், பைலட் மீதுதான் தவறு இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இருப்பினும் முழுமையான விசாரணை அறிக்கை வெளியான பின்னர்தான் உண்மை தெரிய வரும்.
சொந்த நாட்டு மக்களை துன்புறுத்துவதாக வழக்கமாக வடகொரியாவிலிருந்துதான் தகவல்கள் வரும். ஆனால், இந்த முறை தென்கொரியாவிலிருந்து இதுபோன்ற விஷயங்கள் கவனத்திற்கு வந்திருப்பது சர்வதேச அளவில் பேசு பொருளாகியுள்ளது.
-
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications