திடீரென டிரஸை கழற்றி நிர்வாணம்.. விமானத்தில் பெண் செய்த முகம் சுளிக்க வைக்கும் சம்பவம்! ஷாக்
ஹஸ்டன்: விமானம் புறப்படத் தயாராக இருந்த போது, திடீரென பெண் ஒருவர் தனது ஆடைகளைக் களைந்து ஆவேசமாகக் கத்த ஆரம்பித்துவிட்டார். விமானத்தில் குழந்தைகளும் கூட இருந்த நிலையில், அந்த பெண் இதுபோல ஆடைகளைக் கழற்றி கதறிய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. விமானப் பணிப்பெண்கள் எவ்வளவு முயன்றும் அந்த பெண்ணை கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை.
அமெரிக்காவில் எப்போதும் நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத பல வினோத சம்பவங்கள் நடக்கும். அழுத்தம், வேலைப்பளு என இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும்.

முகம் சுளிக்க வைக்கும் சம்பவம்
சில நேரம் எல்லை மீறி பொது இடங்களில் கூட முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்களைக் கூடச் செய்வார்கள். அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் இப்போது அமெரிக்காவில் நடந்துள்ளது. அங்கு ஹூஸ்டனில் இருந்து பீனிக்ஸ் நகருக்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் செல்ல தயாராக இருந்தது.
செக் இன் எல்லாம் முடிந்து பயணிகள் வழக்கம் போலவே விமானத்தில் ஏறினர். அதுவரை எல்லாமே நார்மலாகவே இருந்துள்ளது. விமானியும் கேட்டில் இருந்து கிளம்பி ரன்வே நோக்கி விமானத்தை இயக்க ஆரம்பித்தார். அப்போது தான் யாருமே எதிர்பார்க்காத சம்பம் நடந்துள்ளது. அதாவது விமானம் சென்று கொண்டு இருக்கும் போது திடீரென பெண் ஒருவர் தனது அடைகளை எல்லாம் கழற்றி பைலட்கள் இருந்த காக்பிட்டில் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திடீர் குழப்பம்
அந்த பெண் ஆரம்பத்தில் பார்க்க நார்மலாகவே இருந்துள்ளார். முழுமையாக உடை அணிந்து தனது சீட்டில் உட்கார்ந்து கொண்டு இருந்தார். ஆனால், விமானம் ரன்வேயை நோக்கிக் கிளம்பத் தொடங்கியதும் அப்பெண்ணுக்கு திடீரென ஏதோ ஆகிவிட்டது. உடனே விமானத்தின் முன்பக்கம் சென்ற அந்த பெண் தன்னை இறக்கிவிடுமாறு சொல்லிக் கத்தியுள்ளார்.
இருப்பினும், விமானம் கிளம்பிவிட்டதால் இறக்கிவிட முடியாது எனக் கூறியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், திடீரென தனது ஆடைகளைக் கழற்றி கத்த தொடங்கிவிட்டார். முதலில் அந்தப் பெண் என்ன செய்கிறார் என்றே பயணிகளுக்குப் புரியவில்லை. ஆனால், சில நொடிகளில் அவர் முழுமையாக டிரஸை கழற்றி நிர்வாணமாகிவிட்டார்.
நிர்வாணமான பெண்
இது குறித்து பயணிகள் கூறுகையில், "அவர் கொஞ்ச நேரத்திலேயே எல்லா ஆடைகளையும் கழற்ற தொடங்கிவிட்டார். முதலில் தொப்பி, காலணிகளை மட்டுமே கழற்றினார். இதனால் யாரும் பெரிதாக நினைக்கவில்லை. விமானப் பணிப்பெண்கள் அருகே வந்து அவரை தடுப்பதற்குள், அவர் மொத்தமாக அனைத்து டிரஸையும் கழற்றி நிர்வாணம் ஆகிவிட்டார்" என்றார்.
விமானத்தில் குழந்தைகளும் கூட இருந்த நிலையில், அதை எதையும் கண்டு கொள்ளாமல் அந்த பெண் டிரஸை மொத்தமாகக் கழற்றியிருக்கிறார். இதனால் அங்கிருந்த பயணிகள் அனைவரும் முகம் சுளித்தனர். அந்த பெண்ணை விமான குழு கட்டுப்படுத்த முயன்ற போதிலும், அவர் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் அவர் விமான காக்பிட்டிற்கும் கூட செல்ல முயன்று காக்பிட் கதவை ஆவேசமாகத் தட்டத் தொடங்கினார்.
அடுத்து என்ன நடந்தது?
அந்த பெண் கட்டுக்கடங்காமல் ஆவேசமாகக் கத்திக்கொண்டே இருந்தார். உள்ளே நிலைமை மோசமாகப் போனதால் பைலட், விமானத்தை மீண்டும் விமான நிலைய கேட்டிற்கே திருப்பிவிட்டார். விமானத்தில் இருந்த பணிப்பெண் ஒருவர், நிர்வாணமாக இருந்த அந்த பெண் மீது டிரஸை கொண்டு மூட முயன்றார். ஆனால், அதற்கு அடங்காமல் அதையும் தூக்கி வீசிவிட்டுக் கத்திக் கொண்டே இருந்துள்ளார்.
விமானம் மீண்டும் ஏர்போர்ட்டிற்கு திரும்பிய நிலையில், ஹூஸ்டன் போலீசார் அவரைக் கைது செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதேநேரம் அவர் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றே தெரிகிறது. இந்த களேபரத்தால் சுமார் ஒரு மணி நேரம் வரை விமானம் தாமதம் ஆகியுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த பெண் விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட பிறகு, விமானம் புறப்பட்டுச் சென்றது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications