'நினைவுகளின் பொக்கிஷமாக இருக்கும்' ஸ்பெயின் பயணம் நிறைவு.. தமிழ்நாடு புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்
மேட்ரிட்: ஸ்பெயினில் தமிழ் சமூகத்தினரை சந்தித்தது நினைவுகளின் பொக்கிஷமாக இருக்கும் என்றும், மறக்க முடியாத நினைவுகளை ஸ்பெயின் நாட்டினரும் அங்குள்ள தமிழர்களும் அளித்தனர் என்று ஸ்பெயின் பயணத்தை முடித்து சென்னை புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை பெருக்கி அதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த முதல்வர் ஸ்டாலின் தீவிர முயற்சி கொண்டு இருக்கிறார். அந்த வகையில், கடந்த மாதம் தமிழகத்தில் முதலீட்டாளர் மாநாடு நடத்தினார். இதையடுத்து, கடந்த ஜனவரி 27 ஆம் தேதி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு சென்றார். முதல்வருடன் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவும் ஸ்பெயினுக்கு சென்றார்.

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்ட முதல்வர் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். "தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமையையும், தற்போது நிலவும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலையும் ஸ்பெயின் நாட்டின் தொழில் துறையினருக்கும் அங்குச் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்கும் எடுத்துரைத்தேன்.
நல்லாட்சி, அமைதி, திறன்மிகு மனிதவளம், எல்லையற்ற வாய்ப்புகளைக் கொண்ட தமிழ்நாட்டில் மேலும் பல குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாநாடு அமைந்தது முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். பின்னர் ரோகா குழும இயக்குநர் கார்லோ வெலாஸ்கெஸ் மற்றும் ரோகோ இந்தியா நிர்வாக இயக்குநர் நிர்மல் குமாரை சந்தித்து ரூ.400 கோடி முதலீட்டை தமிழ்நாட்டுக்கு ஈர்த்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
அதேபோல், ஹாபாக் - லாயிடு நிறுவன நிர்வாக அதிகாரி ஜெஸ்பெர் கான்ஸ்துருப் மற்றும் அதன் இயக்குநர் ஆல்பெர்ட் லொரெண்டேவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.2,500 கோடி முதலீடு செய்வதாக அறிவித்து இருக்கிறது. பின்னர் ஸ்பெயினில் இருந்தபடியே, தமிழ்நாடு பட்ஜெட் உள்ளிட்ட அரசு நிர்வாக பணிகள் தொடர்பாக காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
ஸ்பெயினில் 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் மு க ஸ்டாலின் தனது பயணத்தை நிறைவு செய்து இந்தியா புறப்பட்டுள்ளார். சென்னைக்கு புறப்பட்டு முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். முதல்வர் மு க ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளேன். சிறப்பான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்ட ஸ்பெயினில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்பெயினில் தமிழ் சமூகத்தினரை சந்தித்தது நினைவுகளின் பொக்கிஷமாக இருக்கும். மறக்க முடியாத நினைவுகளை ஸ்பெயின் நாட்டினரும் அங்குள்ள தமிழர்களும் அளித்தனர். இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு!












Click it and Unblock the Notifications