அங்க என்னம்மா அவ்ளோ பெரிய சத்தம்...!
டொமினிக்கா தீவு: கரீபிய தீவுகளில் ஒன்றான டொமினிகா தீவில், ஒரு பெரிய திமிங்கலம் கடலுக்கு அடியில் "ஆய்" போனபோது எழுந்த சப்தத்தால் கிட்டத்தட்ட அந்தப் பகுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது போன்ற சூழல் உருவாகி பெரும் பரபரப்பாகி விட்டதாம்.
அதை விட காமெடி, அந்தப் பகுதியில் அப்போது கடலுக்குள் இறங்கியிருந்த சில டைவிங் வீரர்கள் இந்த மலக் குவியலுக்குள் சிக்கி விழி பிதுங்கிப் போய் விட்டார்களாம்.

எல்லாம் இந்த ஸ்பெர்ம் வேல் என்ற திமிங்கலம் செய்த சேட்டைதான் காரணம். டொமினிக்காவில் தீவுப்பகுதியில்தான் இந்த காமெடி கலாட்டா நடந்தேறியுள்ளது.
இதுகுறித்துக் கூறிய 30 வயதான கனடா புகைப்படக் கலைஞர் கெரி வில்க், கிட்டத்தட்ட பலத்த சூறாவளி காற்று வீசியது போன்ற சூழல் அப்போது காணப்பட்டது. தனது வாலை அப்படியும் இப்படியும் வேறு வேகமாக ஆட்டியதால் கிட்டத்தட்ட பெரிய சூறாவளி வீசுவது போன்று காணப்பட்டது.
சுத்தமான கடற்பரப்பில் நீந்திக் கொண்டிருந்த டைவிங் வீரர்கள் திடீரென ஒரு பெரிய மலக் குவியலுக்குள் சிக்கிக் கொண்டதால் அதிர்ந்தும் பயந்தும் போய் விட்டனர்.
கிட்டத்தட்ட 30 மீட்டர் பரப்பளவுக்கு இந்த மலக் குவியலும், பலத்த "வாயு"வும் சூழந்திருந்தது. ஒரு வகையில் திமிங்கலத்தின் தற்பாதுகாப்பு நடவடிக்கையே இது. எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள இவ்வாறு அது செய்து வழக்கம்.
நாங்கள் நான்கு பேர் இந்த வித்தியாசமான சூழலில் மாட்டிக் கொண்டோம். இருப்பினும் தொடர்ந்து நீந்தி அந்தப் பகுதியைக் கடந்தோம். ஆனாலும் அந்தத் திமிங்கலம் நிறுத்துவதாக இல்லை. ரொம்ப நேரம் மலம் போய்க் கொண்டிருந்தது என்றார் வில்க்.
நல்ல அனுபவம்தான்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications