பிறந்த 5 வாரமே ஆன பெண் குழந்தையை கொடூரமாக காயப்படுத்திய இந்தியப் பெண்.. கைது
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஐந்து வாரமே ஆன பெண் குழந்தைக்கு உயிருக்கு ஆபத்தான காயங்களை ஏற்படுத்திய இந்திய வம்சாவளித் தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்கிழக்கு அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள ஸ்பிரிங் லேக் நகரில் வசித்துவரும் ரிங்குபென் பட்டேல் என்ற பெண் கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் தேதி அவசர உதவி எண்ணுக்கு போன் செய்தார்.
தனது ஐந்துவார குழந்தை பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாகவும், உடனடியாக வந்து உதவ வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

கதறிக் கொண்டிருந்த குழந்தை:
அவசர உதவி மருத்துவ குழுவினர் வந்து பார்த்தபோது அந்தப் பெண் குழந்தை, கால் மற்றும் மார்பெலும்பு உடைந்து வலியால் கதறி அழுதுகொண்டிருந்தது.
மூளைப்பகுதியில் ரத்தக்கசிவு:
உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்று ஸ்கேன் செய்து பார்த்ததில் அதன் மூளைப்பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
காப்பகத்தில் குழந்தை:
கிட்டதட்ட 20 நாள் சிகிச்சைக்கு பின்னர் அந்த குழந்தை தற்போது அரசின் சமூக நலக்காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் அந்தப் பெண்மணிதான் என்ற உண்மையும் தெரியவந்தது.
தாயாருக்கு தண்டனை:
இந்நிலையில் 5 வார பெண் குழந்தைக்கு உயிருக்கு ஆபத்தான காயங்களை ஏற்படுத்திய ரிங்குபென் பட்டேலை கைதுசெய்துள்ள போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வடக்கு கரோலினா சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications