‛கொன்று குவிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள்’.. மே 18 மறக்க முடியுமா? இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினம்
கொழும்பு: இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஏராளமானவர்கள் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இலங்கையின் வடகிழக்கு பகுதியில் ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். தங்களின் சுதந்திரமான வாழ்க்கைக்கு அவர்கள் தனிஈழம் கோரி போராட தொடங்கினர். இது இலங்கையின் உள்நாட்டு போராக உருவானது. 2007 காலக்கட்டத்தில் இந்த போர் உச்சக்கட்டத்தை எட்டியது.

அப்போது இலங்கையின் அதிபராக மகிந்த ராஜபக்சே இருந்தார். அவர் ஈவு ஈரக்கமின்றி ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க உத்தரவிட்டார். இதையடுத்து இலங்கை ராணுவத்தின் ஈழத்தமிழர்களை கொன்று குவித்தனர். இந்த போர் 2009 மே 18ல் முடிவுக்கு வந்தது.
குறிப்பாக இந்த போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கையின் முள்ளிவாய்க்காலில் ஏராளமான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் அங்கு திரண்டிருந்த மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவது தடை செய்யப்பட்டது. இது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இழைக்கப்பட்ட பெரும் கொடுமையாகவும், தமிழர் இனத்தை கொன்று குவித்த கொடூர செயலாகவும் இன்று வரை பார்க்கப்படுகிறது. அதோடு சரித்திரத்தில் அழிக்க முடியாது பெரும் வடுவாக இந்த படுகொலை சம்பவம் மாறி உள்ளது.
இந்நிலையில் தான் இலங்கை இறுதிக்கட்ட போரில் தமிழர்கள் கொல்லப்பட்டதை நினைவுக்கூறும் வகையில் இலங்கை உள்நாட்டு போர் முடிவடைந்த மே 18ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி இலங்கை தமிழ் இனப்படுகொலையின் 15வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் இன்றைய தினம் தமிழகம் மட்டுமின்றி உலகில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications