இறந்த பெண் போராளிகளின் உடல்களை கூட விட்டுவைக்காத 'வக்கிர' இலங்கை ராணுவம்
லண்டன்: இலங்கையில் இறுதிப் போரின்போது இறந்த பெண் போராளிகளின் உடல்களுக்கு இலங்கை ராணுவத்தினர் பாலியல் வன்கொடுமைகளை செய்ததாக சேனல் 4 தொலைக்காட்சியின் கெல்லம் மெக்ரே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சேனல் 4 ஏற்கனவே பல ஆதாரங்கள் அடங்கிய வீடியோக்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அது மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
அந்த புதிய வீடியோவில் இலங்கை ராணுவத்தினர் இறந்து கிடக்கும் பெண் போராளிகளின் உடல்களுக்கு பாலியல் வன்கொடுமைகளை செய்யும் செயல் பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. அந்த வீடியோவை வெளியிட்ட சேனல் 4 ஆவணப் பட இயக்குனர் கெல்லம் மெக்ரே கூறுகையில்,

மரணம்
போரில் 5 பேர் இறப்பது சிறிய விஷயமாக இருக்கலாம். ஆனால் போரின் இறுதி கட்டத்தில் அரசின் ஷெல் தாக்குதல்களால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது சிறிய விஷயம் அல்ல.

பாலியல் கொடுமை
போரில் கொல்லப்பட்ட பெண் போராளிகளின் உடல்கள் மீது இலங்கை ராணுவத்தினர் மீண்டும், மீண்டும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வீடியோ எப்பொழுது எடுக்கப்பட்டது என்று தெளிவாகத் தெரியவில்லை.

ராணுவ வீரர்
அந்த வீடியோ போரின் இறுதி ஆண்டு அல்லது அதற்கு முன்பு எடுக்கப்பட்டிருக்கலாம். வீடியோவை ராணுவ வீரர் ஒருவர் எடுத்துள்ளார். மற்றொரு வீரர் அதில் சிங்கள மொழியில் பேசுகிறார். வீரர்கள் பாலியல் வன்கொடுமைகள் செய்து சிரித்து மகிழ்கின்றனர்.

வீடியோ
அந்த வீடியோ உண்மையானது தான் என்று முன்னணி தடய அறிவியல் நிபுணரான கலாநிதி ரிச்சர்ட் ஷெப்பர்ட் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் உடல்களில் இருக்கும் காயம் போர்க்களத்தில் ஏற்பட்டது அல்ல என்றும், அவை துப்பாக்கியால் சுடப்பட்டதால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஷெப்பர்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு
அந்த வீடியோ குறித்து இலங்கை அரசு கூறுகையில், விடுதலைப் புலிகள் ராணுவத்தினர் போன்று சீருடை அணிந்து சிங்களத்தில் பேசியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சி அறிவிப்பாளர்
விடுதலைப்புலிகள் தொலைக்காட்சி அறிவிப்பாளர் போரின் போது சிக்கி படுகொலை செய்யப்பட்ட வீடியோக்களை நாங்கள் வெளியிட்டோம். ஆனால் அவர் துப்பாக்கிச்சூட்டில் இறந்ததாக இலங்கை அரசு தெரிவித்தது என்றார் மெக்ரே.
இறந்த பெண் போராளிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த 'வக்கிர' இலங்கை ராணுவம்
சேனல் 4 தொலைக்காட்சியின வீடியோ
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications