ராஜபக்சேக்கள் கோட்டைகள் சுக்கு நூறாக தகர்ப்பு-விரட்டியடித்த சிங்களர்- நாமல் ராஜபக்சே கேவலமான தோல்வி!
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி சிங்களப் பேரினவாதியான ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றுள்ளார். அதேநேரத்தில் ஈழத் தமிழரின் ஆயுதப் போராட்டத்தை அழித்து ஒழித்து பல லட்சம் ஈழத் தமிழரை 2009-ம் ஆண்டு இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்சே- கோத்தபாய ராஜ்பக்சேவின் கோட்டைகள் அத்தனையும் சுக்கு நூறாக தகர்க்கப்பட்டுவிட்டன. மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜ்பக்சேவுக்கு சிங்களரே மிக கேவலமான தோல்வியைப் பரிசாக தந்து ஓட ஓட விரட்டியடித்துள்ளனர்.
இலங்கையில் ஈழத் தமிழருக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்ட ஜனாதிபதிகள் எராளம். ஜேஆர் ஜெயவர்த்தனே, பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்கே வரிசையில் மிக மூர்க்கமாக ஈழத் தமிழர்களின் போராட்டத்தை அழித்தது மகிந்த ராஜபக்சேதான். இலங்கை ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்சே, இலங்கை பாதுகாப்புச் செயலாளராக கோத்தபாய ராஜபக்சே என சகோதரர்கள் இருவரும் ஈழத் தமிழழர்களை அழித்து கொன்று குவித்தனர். ஈழத் தமிழர்களின் கால் நூற்றாண்டு விடுதலைப் போராட்டத்தையே நிர்மூலமாக்கினர். பல லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

ஒரு கட்டத்தில் மகிந்த ராஜபக்சே பிரதமராக, கோத்தபாய ராஜபக்சே ஜனாதிபதியான அலங்கோலமும் நிகழ்ந்தது. ஆனால் பொருளாதார சீரழிவால் சிங்களின் பெருங்கோபத்துக்குள்ளாகினர் இருவருமே. அடுத்தடுத்து இருவரும் பதவி விலகி உயிருக்கு அஞ்சி வெளிநாடுகளில் தஞ்சமடைந்த சரித்திரமும் அரங்கேறியது.
தற்போதைய இலங்கை ஜனாதிபதி தேர்தலில் குட்டியைவிட்டு ஆழம் பார்த்த கதையாக ராஜபக்சேக்கள் தங்களது இளவரசர் நாமல் ராஜபக்சேவை களமிறக்கிப் பார்த்தனர். ஆனால் ராஜபக்சேக்கள் எனும் கொடுங்கோலர்களுக்கு அரசியல் வரலாற்றில் இடமே இல்லை என்பதை சிங்களர் தரப்பு மட்டுமின்றி தமிழர் தரப்பும் திட்டவட்டமாகவே வாக்குகள் மூலம் பிரகனடம் செய்துவிட்டன.
அதுவும் அம்பந்தோட்டா என்பது ராஜபக்சேக்களின் கோட்டை என கொக்கரித்த காலமும் இருந்தது. ஆனால் அந்த அம்பந்தோட்டாவிலேயே நாமல் ராஜபக்சேவுக்கு கேவலமான வாக்குகளே கிடைத்தன. வெறும் 6.25% வாக்குகளைத்தான் நாமல் ராஜ்பக்சேவால், அம்பந்தோட்டாவில் பெற முடிந்தது. ஆமாம் அம்பந்தோட்டா உள்ளிட்ட ராஜபக்சேக்கள் கனவில் கட்டி வைத்திருந்த கோட்டைகள் அத்தனையும் சுக்கு நூறாக இந்த தேர்தலில் தகர்த்து எறியப்பட்டு ராஜபக்சேக்கள் எனும் கொடுங்கோலர்களின் அரசாட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டுள்ளது என்பதே சரியானதாகும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications