இலங்கை மலையக மக்களுக்கு வீடு வழங்க பட்டா.. நனவாகும் நூற்றாண்டு கனவு
கொழும்பு: இலங்கை மலையக மக்களுக்கு இந்தியா உதவியுடன் வீடு கட்டி கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 1,300 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு மேலும் 2,056 வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக, அந்த மக்களுக்கு இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயக்க பட்டா வழங்கியுள்ளார்.
இலங்கையில் கடந்த சில வருடங்களாக அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. தற்போதுதான் அதில் இருந்து படிப்படியாக மீள தொடங்கியுள்ளனர். அங்கு தேசிய மக்கள் கட்சியின் அனுரகுமார திசாநாயக்க அதிபராக உள்ளார். இலங்கை நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு இந்தியா பல்வேறு வகையில் உதவிக்கரம் நீட்டி வருகிறது.

மலையக மக்களுக்கு வாக்குறுதி
இலங்கையை பொறுத்தவரை மலையக மக்களுக்கு நீண்ட வரலாறு உள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்து அழைத்து செல்லப்பட்டதால், அவர்களை இந்திய வம்சா வழித் தமிழர்கள் என்றும் அழைத்து வந்தனர். அங்கு அவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அந்த மக்கள், ஆதரவுக்கரத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக மலையக மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நேரத்தில் மலையக மக்களுக்காக வாக்குறுதிகளை வழங்குவார்கள். கடந்த 2024 அதிபரான அனுரகுமாரவும், மலையக மக்களின் பழைய வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும். பள்ளி, கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்களை நியமித்தல், சுகாதார வசதிகளை செய்து கொடுத்தல், ஊதிய குறைவு பிரச்சனைக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.
வீடுகட்ட பட்டா
அங்கு சுமார் 10,000க்கும் வீடுகள் இருக்கின்றன. இந்நிலையில் இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ், 1,300 வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 30 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளை விரைந்து கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளும் விரைவில் முடியும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக 2,056 வீட்டு உரிமை பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (12 ஆம் தேதி) இலங்கையில் நடைபெற்றது. அனுரகுமார திசாநாயக்க மக்களுக்கு பட்டா வழங்கினார். மலையக மக்கள் கண்ணீர் மல்க பட்டா பெற்று கொண்டனர். பத்திரம் பெற்றவர்களுக்கு வீடு கட்டும் பணி இந்த வருட இறுதிக்குள் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
4,700 வீடுகள்
பணிகளை வேகமாக முடித்து அந்த வீடுகளையும் மக்களுக்கு விரைந்து ஒப்படைப்போம் என்று அனுரகுமார தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து 2,700 வீட்டு பட்டா விரைவில் வழங்கப்படும் என்றும், 2026 இறுதிக்குள் 4,700 வீடுகளை கட்டி மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications