இலங்கை ஜனாதிபதி தேர்தல்: 4-வது இடத்துக்கு முன்னேறிய ஈழத் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரன்!
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஈழத் தமிழரின் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். தபால் ஓட்டுகளில் தொடக்கத்தில் 4-வது இடத்தில் இருந்த முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே, தமிழர் மாவட்ட வாக்குகள் எண்ணிக்கைக்குப் பிறகு 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. இதனையடுத்து நேற்று இரவு 9 மணி அளவில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. தொடக்கத்தில் தென்னிலங்கையான சிங்களர் பகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்பட்டன. தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுர குமார திசநாயக்க முன்னிலையில் இருந்து வருகிறார். தொடக்கத்தில் சற்று நேரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 2-வது இடம் பெற்றிருந்தார். ரணில் விக்கிரமசிங்கேவுக்கு 3-வது இடமும் நாமல் ராஜபக்சேவுக்கு 4-வது இடமும் கிடைத்தது. ஈழத் தமிழர் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் 5-வது இடத்தில் இருந்தார்.

ஆனால் ஈழத் தமிழர்களின் மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அடுத்தடுத்து வெளியான போது முன்னிலையில் மாற்றம் ஏற்பட்டது. 60%-க்கும் மேல் முன்னிலை பெற்றிருந்த அனுர குமார திசநாயக்கவின் வாக்கு சதவீதம் குறைந்தது. ஆனாலும் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். ரணில் விக்கிரமசிங்கே 2-வது இடத்துக்கும் சஜித் பிரேமதாச 3-வது இடத்துக்கும் மாறினர். அதேபோல ஈழத் தமிழர் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் 4-வது இடத்துக்கு முன்னேறினார். மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அரியநேந்திரனுக்கு மிக அதிகமான வாக்குகள் கிடைத்து முதலிடம் பெற்றார். வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலையில் அரியநேந்திரனுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications