"ஒற்றுமை சாத்தியமே" எனும் நூலின் முதல் பிரதியை பெற்றார் அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரான்!
துபாய்: சார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் "ஒற்றுமை சாத்தியமே" என்ற நூலின் முதல் பிரதியை, தமிழக அரசின் அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர் மற்றும் அமீரக திமுக செயலாளர் எஸ்.எஸ்.மீரான் பெற்றுக் கொண்டார்.

44 ஆவது சார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அரங்கு எண் 7 இல் "ஒற்றுமை சாத்தியமே" என்ற நூல் வெளியீட்டு விழா நேற்றைய தினம் காலை 10.20 மணிக்கு நடந்தது.
ஏ.எஸ்.இப்ராகிம் எழுதிய நூல் வெளியீட்டு விழாவிற்கு இந்திய நல்வாழ்வு பேரவை- தலைவர் அப்துல் ஹாதி தலைமை தாங்கினார். அது போல் புத்தகத்தை பரமக்குடி அன்னை ஆயிசா அறக்கட்டளையின் நிறுவவனர் எஸ்.அப்துல் கபூர் வெளியிட்டார்.
அந்த முதல் பிரதியை தமிழர் நல வாரிய உறுப்பினர் மற்றும் அமீரக திமுக செயலாளர் எஸ்.எஸ்.மீரான் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் பேசிய மீரான், "இப்ராகிம் குறைந்தபட்சம் ஒரு 100 நூல்களையாவது எழுத வேண்டும்" என வாழ்த்தினார்.
தமிழக அரசு அயலகத் தமிழர் நல வாரிய தலைவராக கார்த்திகேய சிவசேனாதிபதி உள்ளார். இவருக்கு கீழ் 7 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த 7 பேரில் ஒருவர்தான் சித்திக் சையது மீரான். இவர் துபாய் மீரான் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஏனெனில் இந்த வாரியத்தில் மும்பை அந்தேரியில் தமிழக எழுத்தாளர்கள் சங்கத்தை சேர்ந்த மீரான் என்ற பெயரில் இன்னொருவரும் இருக்கிறார்.
இந்த வாரியம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனை பாதுகாக்க கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள் 7 பேரும் அரசு சாராதவர்கள் 8 பேரும் என 15 பேர் உள்ளனர்.

நெல்லை மாவட்டம் அரிகேசவநல்லூரை பூர்வீகமாக கொண்ட அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரான், ஐக்கிய அமீரக திமுக அமைப்பாளராக உள்ள நிலையில் அவருக்கு துபாய் அரசின் உயரிய கவுரவமான கோல்டன் விசாவை துபாய் குடியுரிமை அதிகாரி எஸ்.எஸ். மீரானிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு வழங்கினார்.
இந்த கோல்டன் விசாவை முதல்வர் ஸ்டாலினிடம் காட்டி மீரான் வாழ்த்துகளை பெற்றார். அப்போது கொரோனா காலம் என்பதால் தமிழக விமான நிலையங்களில் நடத்தப்படும் ஆர்.டி.பிசிஆர் சோதனைக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications