காதலனை குத்திக் கொன்றுவிட்டு தப்பிவிட்டேன்: ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்ட இளம்பெண்
நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த 18 வயது பெண் தனது காதலரை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பியோடியதை ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பெர்னார்டினோ கவுன்ட்டியைச் சேர்ந்தவர் நகாசியா ஜேம்ஸ்(18). அவர் டோரியன் பவல்(21) என்பவரை காதலித்து வந்துள்ளார். காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பில் முடிந்துள்ளது.

பவல் நகாசியாவின் முகத்தில் குத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நகாசியா அருகில் இருந்த கத்தியை எடுத்து பவலை குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். கடந்த 11ம் தேதி காலை பவல் பிணமாகக் கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதற்கிடையே நகாசியா தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,
கத்தியை எடுத்து அவரை குத்திவிட்டேன். அவரை காயப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் அவர் இறந்துவிட்டார். நான் தப்பியோடிக் கொண்டிருக்கிறேன். அவரை நான் வேண்டும் என்றே குத்தவில்லை என்பது கடவுளுக்கு தெரியும். அவர் என்னை கையால் முகத்தில் குத்தினார். அதனால் தான் கத்தியை எடுத்தேன்.
கடவுளே என்னை மன்னித்துவிடு, சாரி டோரியன் பவல், உனது ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்திருந்தார். பின்னர் அவர் அந்த பதிவை நீக்கிவிட்டார்.
இந்நிலையில் நகாசியா ஹெமட் நகரில் உள்ள நார்த் ஹாமில்டன் அவென்யூவில் இருக்கும் அபார்ட்மென்ட்டில் இருப்பதாக போலீசாருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று நகாசியாவை கொலை வழக்கில் கைது செய்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications