For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்ப்பிணிப் பெண்ணை பலாத்காரம் செய்து அக்கிரமம் செய்த 50 வயது நபருக்கு 25 ஆண்டு சிறை!

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது நபர், அந்தப் பெண்ணை தனக்கு தாய்ப்பால் புகட்டுமாறும் கட்டாயப்படுத்தி சித்திரவதை செய்து தற்போது 25 வருட சிறைத் தண்டனையைப் பெற்றிருக்கிறார்.

அந்த கொடூர நபரின் பெயர் கெவின் கிப்பன்ஸ். இவர் இரு பெண்களை கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்கியதாக கைதாகியுள்ளார்.

தனது செயல்கள் பைபிளில் கூற்றுப்படி நியாயமானதே என்றும் இவர் கோர்ட்டில் பைபிளை மேற்கோள் காட்டி கூறியதால் கோர்ட்டே அதிர்ந்து போனது. இவர் மீது 11 குற்றச்சாட்டுக்களை நிரூபித்த கோர்ட் தற்போது 25 வருட சிறை தண்டனையை இவருக்கு அளித்துள்ளது.

இதில் கர்ப்பிணிப் பெண்ணை பலாத்காரம் செய்த இந்த கிப்பன்ஸ், அவருக்குக் குழந்தை பிறந்த பின்னர் தனக்கும் தாய்ப்பால் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தி அதைச் சாதித்துள்ளார் என்பது கொடூரமானது.

இவரால் பாதிக்கப்பட்ட இரு பெண்களுமே ஒரே தெருவில் வசித்து வருபவர்கள். இருவரையும் மாறி மாறி பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தியுள்ளார் இந்த நபர். இதற்கு அவர் பைபிளையும் துணைக்கு அழைத்ததுதான் கொடுமையானது.

இவர் மீது பாலியல் பலாத்காரம், பாலியல் தாக்குதல் உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அனைத்தும் நிரூபிக்கப்பட்டு தற்போது இவருக்கு 25 வருட சிறைத் தண்டனை கிடைத்துள்ளது.

கடந்த 10 வருடமாக இந்த இரு பெண்களையும் அவர் தவறாகப் பயன்படுத்தி வந்துள்ளார். உடல் ரீதியாக, வார்த்தை ரீதியாக சித்திரவதை செய்துள்ளார்.

கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோவிலும் படமாக்கி அதைக் காட்டியும் அப்பெண்ணை இந்த நபர் மிரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A stalker raped a pregnant woman and then forced her to breastfeed him after she gave birth. Kevin Gibbons, 50, caused immense psychological damage to the woman and another victim - both of whom he subjected to horrifying sex crimes. Gibbons abused the women then quoted passages from the Bible to justify his depraved actions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X